Home
JANUARY
ஜனவரி-23. இல்பேர்ட்டின் அடிப்படைத் தேற்றம், இல்பேர்ட்டின் கருதுகோள்கள் வகுத்த ஜெர்மானிய கணிதவியலாளர்- டேவிட் ஹில்பெர்ட் (David Hilbert) பிறந்த தினம்.
ஜனவரி-23. இல்பேர்ட்டின் அடிப்படைத் தேற்றம், இல்பேர்ட்டின் கருதுகோள்கள் வகுத்த ஜெர்மானிய கணிதவியலாளர்- டேவிட் ஹில்பெர்ட் (David Hilbert) பிறந்த தினம்.
07:47
Read
இன்று பிறந்த நாள்:- ஜனவரி-23.
இல்பேர்ட்டின் அடிப்படைத் தேற்றம்,
இல்பேர்ட்டின் கருதுகோள்கள் வகுத்த ஜெர்மானிய கணிதவியலாளர்-
டேவிட் ஹில்பெர்ட்
(David Hilbert) பிறந்த தினம்.
பிறப்பு:-
ஜனவரி-23, 1862 ஆம் ஆண்டு, காலின்கிராடு ஓப்லாஸ்து, இரஷ்யாவில் பிறந்தார்.
1872 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இல்ட்பேர்ட் பிரைடெரிக்சுகோல்லிக் பள்ளியில் சேர்ந்தார். பிறகு அறிவியல் பயில வில்லெம் பள்ளியில் பயின்றார்.1880 ஆம் ஆண்டில் இல்பேர்ட் அல்பெர்டினா என்றழைக்கப்படும் கோனிக்சுபெர்க் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து பயின்றார்.
ஆராய்ச்சிகள்:-
பல துறைகளில் அடிப்படைத் தத்துவங்களை கண்டறிந்தும், பரந்த அளவில் அவற்றை மேம்படுத்தியும் உள்ளார்.
மாறாக் கோட்பாடு மற்றும் வடிவவியல்
பிரிவுகளில் இல்பேர்ட்டின் கருதுகோள்கள் முக்கியமானவையாக இருக்கின்றன. மேலும் இல்பேர்ட்டு இடைவெளிகள் என்ற ஒரு கொள்கையையும் உருவாக்கினார்.
இவை சார்புப் பகுப்பாய்வின் அடித்தளமாக விளங்குகின்றன.
கேன்டரின் கணக் கோட்பாட்டினையும், வரம்பிலி எண்களையும் இல்பேர்ட்டு சியார்சு ஏற்றுக்கொண்டதுடன் அதனை ஆதரிக்கவும் செய்தார்.
1900ஆம் ஆண்டில் அவர் அளித்த கணிதச் சிக்கல்களின் தொகுப்பு இருபதாம் நூற்றாண்டின் பல கணித ஆய்வுக் கட்டுரைகளுக்கு காரணமாக அமைந்தது.
தற்கால கணித இயற்பியலுக்கான முக்கிய கருவிகளை மேம்படுத்துவதிலும் முறைமைகளை நிறுவுவதிலும் இல்பேர்ட்டு மற்றும் அவரது மாணாக்கர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது.
இல்பேர்ட்டின் கருதுகோள்கள்:-
1899ஆம் ஆண்டில் வடிவக் கணிதத்தின் அடித்தளங்கள் (Grundlagen der Geometrie) என்ற தமது ஆக்கத்தை வெளியிட்டார். இதில் வழைமையான யூக்ளிடின் கருதுகோள்களுக்கு மாறாக இல்பேர்ட்டின் கருதுகோள்கள் என்ற முறையான தொகுப்பை முன்மொழிந்தார்.
1900ஆம் ஆண்டு பாரிசில் நடந்த பன்னாட்டு கணிதவியலாளர் மாநாட்டில் பல தீர்வுகாணாத கணிதச் சிக்கல்களை எடுத்தியம்பினார்.
இல்பேர்ட்டின் திட்டம்
1920இல் உயர் ஏரணக் கணிதத்தில்இவர் துவங்கிய ஆய்வுத்திட்டம்
இல்பேர்ட்டின் திட்டம் என அழைக்கப்பட்டது.
பணிகள்:-
1884 ஆம் ஆண்டில், அடோல்ப் அர்விட்சு கோட்டின்கென்டில் இருந்து பேராசிரியராக வந்து சேர்ந்தார்.
இல்பேரெட் 1885 ஆம் ஆண்டில் தனது முனைவர் பட்டத்தை பெற்றார். பெர்டினான்ட் வான் லிண்டெமான் என்பவரின் வழிகாட்டுதலில், சிறப்பு இரும எண் வடிவங்களின் மாறாத பண்புகள், குறிப்பாக கோள ஒற்றுமை செயல்பாடுகள் என்ற தலைப்பில் இவருடைய ஆய்வுக் கட்டுரை எழுதப்பட்டது.
1886 ஆம் ஆண்டு முதல் 1895 வரை கோனிக்சுபெர்க் பல்கலைக் கழகத்திலேயே ஒரு மூத்த விரிவுரையாளராக இல்பேர்ட்டு தொடர்ந்து பணியாற்றினார். 1895 ஆம் ஆண்டில், பெலிக்சு கிளீன் தலையிட்டதன் விளைவாக கோட்டிங்கன் பல்கலைக் கழகத்தில் கணித பேராசிரியராகப் பொறுப்பேற்றார்.
1912 ஆம் ஆண்டு வரை இல்பேர்ட்டு கணிதவியலாளராக இருந்தார். அவருடன் பணியாற்றிய கணிதவியலாளரும் ஆசிரியருமான ஹெர்மன் 1912ல் மரணம் அடைந்தார். அதனால் இவர் 1913ஆம் ஆண்டில் இருந்து இயற்பியல் ஆசிரியர் ஆனார். அல்பர்ட் ஐன்ஸ்டீன்புவியீர்ப்பு கொள்கைகளின் அடிப்படைகளை 1907ஆம் ஆண்டிலேயே வடிவமைத்து இருந்தாலும் பொதுச் சார்புக் கோட்பாடை இறுதி வடிவத்துக்கு கொண்டுவர பெரிதும் போராடினார்.
1915 ஆம் ஆண்டில் ஐன்ஸ்டீன் தன் புவியீர்ப்பு கொள்கைகளின் முக்கிய விடயங்களை பதிவாக்கிய போதே இல்பேர்ட்டும் தான் செய்த புவியீர்ப்பு சமன்பாடு பற்றிய விடயங்களை பதிவாக்கி இருந்தாலும் இக்கொள்கையில் ஐன்ஸ்டீனே முழு உரிமை உடையவர் என்று கூறினார்.
விருதுகள்:-
லோபோசேவ்ஸ்கி பரிசு -(1903),
Bolyai பரிசு- (1910) போன்ற விருதுகளை பெற்றார்.
மறைவு:-
பிப்ரவரி-14, 1943 ஆம் ஆண்டு,
கோட்டிங்கென், ஜெர்மனியில் மரணமடைந்தார்.
ஜனவரி-23. இல்பேர்ட்டின் அடிப்படைத் தேற்றம், இல்பேர்ட்டின் கருதுகோள்கள் வகுத்த ஜெர்மானிய கணிதவியலாளர்- டேவிட் ஹில்பெர்ட் (David Hilbert) பிறந்த தினம்.
Reviewed by JAYASEELAN.K
on
07:47
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
07:47
Rating: 5
Tags :
JANUARY


No comments: