Home
JANUARY
ஜனவரி-23. பல மடங்கு கனமான ஆதாரத் துகளைக் (Elementary particles) கண்டறிந்த ஜப்பான் இயற்பியல் அறிஞர்- ஹிடேகி யுகாவா (Hideki Yukawa) பிறந்த தினம்.
ஜனவரி-23. பல மடங்கு கனமான ஆதாரத் துகளைக் (Elementary particles) கண்டறிந்த ஜப்பான் இயற்பியல் அறிஞர்- ஹிடேகி யுகாவா (Hideki Yukawa) பிறந்த தினம்.
07:44
Read
இன்று பிறந்த நாள்:- ஜனவரி-23.
பல மடங்கு கனமான ஆதாரத் துகளைக்
(Elementary particles)
கண்டறிந்த ஜப்பான் இயற்பியல் அறிஞர்- ஹிடேகி யுகாவா (Hideki Yukawa) பிறந்த தினம்.
பிறப்பு:-
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜனவரி-23,1907 ஆம் ஆண்டு பிறந்தார்.
சொந்த ஊரிலேயே ஆரம்பக் கல்வி பயின்றார்.ஆரம்பத்தில் கணிதத்தில் ஆர்வம் கொண்டிருந்த இவருக்கு பின்னர் அறிவியலில் நாட்டம் அதிகரித்தது. மேற்படிப்புக்கு அறிவியல் பாடத்தை தேர்வு செய்து,கியோட்டோ இம்பீரியல் பல்கலைக்கழகத்தில் பயின்று பட்டம் பெற்றார்.
பணிகள்:-
கியோட்டோ இம்பீரியல் பல்கலைக் கழகத்தில் 1929-லிருந்து,4 ஆண்டுகளுக்கு விரிவுரையாளராகப் பணிபுரிந்தார்.ஒசாக்கா பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றினார். 1938-ல் முனைவர் பட்டம் பெற்றார். இம்பீரியல் பல்கலைக் கழகத்தில் மீண்டும் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.
ஆராய்ச்சிகள்:-
பட்டதாரியான இவர் கோட்பாட்டு இயற்பியலில் ஆர்வம் செலுத்தினார்.
அணுக்கருவில் ஏற்படும் வலிமை மிக்க விசையை உருவாக்கும் ஆதாரத் துகளை
(Elementary particles) கண்டறிவதில் அதிக ஆர்வம் செலுத்தினார்.
ஆதாரத் துகள்களுக்கு இடையே ஏற்படும் உள்வினைகள் பற்றி ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டார். இதில் அணுக்கரு விசைக்கான புதிய புலக் கொள்கையை விளக்கியிருந்தார். ‘மீஸான்’ என்ற பொருள் வெளிப்படுவதையும் குறிப்பிட்டிருந்தார். இந்த காலக்கட்டத்தில், காஸ்மிக் கதிர்களில் இருந்து வெளிப்படும் ஒருவகை மீஸான் துகளை அமெரிக்க இயற்பியலாளர்கள் கண்டறிந்தது, இவரது ஆய்வுகளுக்கு உத்வேகமூட்டின.அணுக்கரு ஆற்றல்களின் மீஸான் கோட்பாட்டை உருவாக்கினார். அணுக்கருவில் ஏற்படும் வலிமை மிக்க அணுக்கரு விசையை உருவாக்கும் எலெக்ட்ரானைவிட பன்மடங்கு கனமான ஆதாரத் துகளைக் கண்டறிந்தார்.
நூல்கள்:-
துகள்கற்றை எந்திரவியலுக்கான முன்னுரை' (Introduction to Quantum Mechanics) 1946, ஆதாரத் துகள் கோட்பாட்டுக்கான முன்னுரை(Introductioan to the Theory of Elementary Particles-1948) ஆகிய இரண்டு நூல்களை ஜப்பானிய மொழியில் எழுதி வெளியிட்டார். 'கோட்பாட்டு இயற்பியல் முன்னேற்றங்கள்' என்ற தலைப்பில் வெளிவந்த ஆங்கிலப்
பருவ இதழின் ஆசிரியராக இருந்தும் செயல்பட்டார்.
விருதுகள்:-
1949-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார். முதன்முதலாக நோபல் பரிசு பெற்ற ஜப்பான் குடிமகன் என்ற பெருமையைப் பெற்றார்.ForMemRoyalSociety- (1963),
லொமோனோசோவ் தங்க பதக்கம்-(1964) போன்ற விருதுகள் பெற்றார்.
பதவிகள்:-
அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராகப் பணியாற்றினார். இவரை கவுரவிக்கும் விதமாகவும் இவருடைய அறிவாற்றல் ஜப்பானுக்குப் பயன்பட வேண்டும் என்பதற்காகவும் ஜப்பான் அரசு 1953-ல் கியோட்டோ பல்கலைக்கழகத்தில் அடிப்படை இயற்பியலுக்கான ஆராய்ச்சி நிறுவனத்தை நிறுவி அதன் முதல் இயக்குநராக இவரை நியமித்தது. 1970-ல் ஓய்வு பெறும்வரை அங்கு பணியாற்றினார்.
ஜப்பான், அமெரிக்காவில் சில பல்கலைக்கழகங்களில் வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
பாரீஸ் பல்கலைக்கழகம், இந்திய அறிவியல் கழகம், எடின்பர்க் ராயல் கழகம் உள்ளிட்ட பல அறிவியல் அமைப்புகள் இவரைத் தங்களது அயல்நாட்டு உறுப்பினராக தேர்ந்தெடுத்தன.
மறைவு:-
முதன்முதலாக ஜப்பானுக்கு நோபல் பரிசைப் பெற்றுத் தந்தவரும், தலைசிறந்த கோட்பாட்டு இயற்பியல் அறிஞருமான இவர்,1981 ஆம் ஆண்டு செப்டம்பர்-08 ஆம் நாள் கியோட்டோ என்ற ஊரில் மரணமடைந்தார்.
சிறப்புகள்:-
ஜப்பான்-கியோட்டோ நகர் மதிப்பியல் குடிமகன்' (Honarary citizen of the city of Kyoto, Japan) என்ற சிறப்பு இவருக்கு வழங்கப்பட்டது. மேலும்,இவருடைய உருவம் பொறித்த அஞ்சல் வில்லைகள் வெளியிடப்பட்டன.
ஜனவரி-23. பல மடங்கு கனமான ஆதாரத் துகளைக் (Elementary particles) கண்டறிந்த ஜப்பான் இயற்பியல் அறிஞர்- ஹிடேகி யுகாவா (Hideki Yukawa) பிறந்த தினம்.
Reviewed by JAYASEELAN.K
on
07:44
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
07:44
Rating: 5
Tags :
JANUARY


No comments: