Breaking

இன்றைய தத்துவஞானி-பிளாட்டோ.. கி.மு. 427 – கி.மு. 347.

💥💥💥💥💥💥💥💥💥
இன்றைய தத்துவஞானி-பிளாட்டோ..
கி.மு. 427 – கி.மு. 347.     

💥 உலகத்தில் உள்ள பிற நாடுகளில் எல்லாம் எதேச்சாதிகாரமும், முடியரசும் நிலவிய காலத்தில், கிரேக்க நாட்டில் மட்டும் குடியாட்சி அமைப்புகள் இருந்தன. காரணம் கிரேக்க நாட்டின் இயற்கைச் சுழ்நிலையே ஆகும். 

💥 நாகரீகத்தை உலக நாடுகள் பலவற்றில் –
பரப்பிய பெருமை கிரேக்க நாட்டிற்கு உண்டு. குறிப்பாக, ஏதென்ஸ் நகரம் இயற்கை –அழகு கொஞ்சும் நாகரமாக இருந்தது என்றால் அது மிகையாகாது. அது மலைகளும் கடல்களும் சூழ்ந்த நகரம். அங்கு ஓர் துறைமுகம் உண்டு. 

💥பாரசீகப் போருக்குப் பின்
கப்பற் படைகளை வாணிபத்திற்குப் பயன் படுத்தப்பட்டன. பல நாட்டுப் பொருட்களும்
ஏதென்ஸ் துறைமுகத்தின் வழியாகத்தான் கிரேக்க நாட்டிற்குள் நுழைய வேண்டும்.

 💥இதனாலேயே அங்கு அறிவியல் ஞானம் ; பல நாட்டு நாணயங்கள் பெருக்கத்தினால்
கணித அறிவு ; கப்பல் பயணத்தின் விளைவாக வானியல் அறிவு போன்றவை –
மேம்பட்டது. எனலாம்.  இவ்வாறு ஏறாக்குறைய 2300 ஆண்டுகளுக்கு
முன் பே கிரேக்க நாடு எல்லாத் துறைகளிலும் முன்னேறி விட்டது என்பதே மிகச்சரியாக இருக்கும்.
இக்கால காட்டத்தில்தான் கிரேக்க நாட்டில் ஏதென்ஸ் நகரில் கி.மு. 427-ஆம் ஆண்டு
ஒரு செல்வக் குடும்பத்தில் கடைசிப் பிள்ளையாக, அரிஸ்டோ– பெரிக்டியோனி 
தம்பதிகளுக்கு செல்லப் பிள்ளையாக பிறந்தவர்தான் பிளாட்டோ. இவரது இயற்பெயர்
அரிஸ்டோக்கிளிஸ் என்பதாகும். 

💥பிளாட்டோ என்பது அவரது புனைப்பெயர் என்றால்
“ பரந்த “என்று பொருள்.
பிளாட்டோ மல்யுத்தப் பயிற்சி பெற்றவர். இவாணுவத்தில் பாணியாற்றும்போதே-
பல பரிசுகள் பெற்றவர். இவர் ஒரு சமூக நாடக ஆசிரியர் – கவிஞரும் கூட.
சாக்ரடீசுடன் ஏற்பட்ட தொடர்பினால், சிந்தனையில் மாற்றம் கொண்டு,கவனத்தை
அரசியல் பக்கம் திருப்பினார்.
இவர் காலத்தில் அரசியல் அமைப்பு பற்றி இருவிதமான கருத்துக்களைக் கொண்டோர்
இருந்தனர். 

💥ஒரு பிரிவினர் சமதர்ம வாதிகள்  மாற்றொரு பிரிவினர் வகுப்பு வாதிகள் 
எளியவர்களை  ஆடக்கி ஆள விலியவர்களால் உருவாக்கப்பட்டது தான் சட்டம்  இது
சமவாதிகளின் கொள்கை. 

💥இயற்கையின் படைப்பில் எல்லா மனிதர்களும் சம்மானவர்கள் அல்லர். பிறப்பினால் ஏற்றத்தாழ்வுகள் உண்டாகின்றன. வலியவர்களின் சக்தியை, எளியவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட்துதான் நீதி, நேர்மை என்னும் மனித தர்மம்”
 
💥இது வகுப்பு வாதிகளின் கொள்கையாக இருந்தது. எனவே, இவ்விரு பிரிவினர்களால் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. இதன் அடிப்படையில் கிரேக்க நாட்டில் ஒரி விநோதமான குடியாட்சி முறை அமுலில் இருந்தது... தேற்ந்தெடுக்கப்படும் தலைவர்கள் சர்வாதிகர்ர்களாக, நேர்மை அற்றவர்களாக, அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்தி வந்தனர். இச்சூழலில் சர்வ வல்லமை படைத்த ஓர் அரசியல் அமைப்பை உருவாக எண்ணம் கொண்டார் பிளாட்டோ. 

💥அப்போது ஏதன்ஸ் நகர மக்கள் தொகையில் மூன்றில்
ஒரு பகுதியினர் அடிமைகளாக இருந்தனர். தேர்தலும் நேர்மையாக நடைபெறுவதில்லை.
அப்போது குடியாட்சி முறைக்கு எதிராக ஒரு புரட்சி நடந்தது. அதில் பிளாட்டோ
பங்கு கொண்டார். ஆனால் புரட்சியாளர்களின் போக்கு எதிர்மாறான கொள்கை உடையதாக
இருந்தது. எனவே, இவர் அர்சியலில் மீது வெறுப்பு கொண்டார்.

💥சாக்ரடீசை தண்டனையில் இருந்து காப்பாற்ற பெரும் முயற்சி கொண்டார் இவர் . எனவே,ஏதென்ஸ் நகர  ஆட்சியாளர்கள் இவர் மீது “ இராஜத்துரோகம் குற்றம்”  சாட்டினர். இவரைத் தலைமறைவாகி விடும்படி இவரது நண்பர்கள் வற்புறுத்தினர். இவரும்
ஏதென்ஸ் நகரிலிருந்து ( கி.மு. 399 – சாக்ரடீஸ் மறைந்த ஆண்டு ) புறப்பட்டு எகிப்து நாடிற்குச் சென்றார்.

 💥சிறுபான்மையினரான அறிஞர்கள் பெரும்பான்மையினரான
விவசாயிகள் மீது ஆதிக்கம் செலுத்துவதைக் கண்டார். பின்பு அங்கிருந்து இத்தாலிக்குப்
பயணமானார்.
இத்தாலியில் தத்துவஞானி பித்தகோரசால் நிறுவப்பட்ட கல்வி நிலையத்தில் பொதுவுடைமை அரசியலைக் கற்றார். 

💥பித்தகோரசின் கொள்கைகளை இத்தாலியில் அதிகம் பரப்பியவர்
பிளாட்டோதான் என்றால் மிகையாகாது. அங்கிருந்து இவர் ஆப்ரிக்காவுக்கும், பின்பு
ஜீடியா நகருக்கும் சென்று அங்கு சோசலிசக் கொள்கைகளைக் கற்றார். 

💥இந்திய நாட்டிற்கும்
வந்து இந்துக்களின் ஆத்ம – தியானங்களையும் – வர்ணாசிரம தர்மத்தையும் ஆராய்ந்தார்.
இது போன்று 12 ஆண்டுகள் பல நாடுகளுக்குச் சென்று அறிவைத்  தேடித் தெளிவு பெற்று தன்னை உயர்த்திக் கொண்டார்.

💥இறுதியாக, - “ தனிமனிதனின் மனம் நன்கு பண்பட வேண்டும், பெருவாரியான மக்களை ஆட்சி செய்பவர்கள் பற்ற்ற்ற அறிஞர்களாகவும், அரசியல் அறிவும் உடையவர்களாக இருக்கவேண்டும். அப்படிப்பட்டவர்கள்தான் உயர்ந்த குடியாட்சி முறையில் நாட்டை 
ஆளமுடியும் “ என்னும் முறையான கொள்கையை அமைத்துக்கொண்டார்.

💥இவர் தமது 42-வது வயதில், உலக நாடுகளின் பயணத்தை முடித்துக்கொண்டு தாய்நாடான கிரேக்கத்திற்கு ( கி.மு. 387-இல் ) திரும்பினார். அரசியல் கல்வி தேவையை
உணர்ந்த அவர்  கலைக் கழகம்   என்னும் அமைப்பினை உருவாக்கி அரசியல் கல்வி
போதிக்க வழி செய்தார். அங்கு அறிவியல், கணிதம், வானியல் ( வணிகவியல் ) போன்ற பாடங்கள் கற்பிக்கப்பட்டன. இக்கலைக் கழ்கமே உலகத்தில் தோன்றிய முதல் பல்கலைக்கழகமாகவும் கல்லூரியாகவும் செயல்பட்டு வந்தது.

💥 இக்கல்லூரி தொடங்கி 20 ஆண்டுகளுக்குள் அதன் பெருமை உலகம் முழுவதும் பரவியது. இளைஞர்களுக்கு
மத்தியில் சமுதாயச் சிற்பியாக விளங்கினார் பிளாட்டோ. கி.மு.4-ஆம் நூற்றாண்டில் கணிதம், வாணியல் வகர்ந்தமைக்கு காரணம் இக்கல்வி நிலையமே ஆகும்.
பிளாட்டோ தனது மறைவிற்குப் பிறகு அக்கலைக் கழகத்தை அறிவியல் கல்விக்கும்,ஆராய்ச்சிக்கும் பயன்படுத்தவேண்டும் என உயில் எழுதி வைத்தார். 

💥இவர் பல நாட்டு
அரசியல்வாதிகளிடம் “ அரசன் சர்வாதிகார்”  கொடுகோலன் என மக்கள் வெறுக்காது,
நாட்டின் தந்தை என விரும்பும் வண்ணம் ஆள வேண்டும் “  என வற்புறுத்திக்
கூறிவந்தார்.ஏறக்குறைய 80 ஆண்டுகள் வரை மகிழ்ச்சியாக இளமைப் பொழிவோடு வாழ்ந்தார்.பிறந்த நாள் அன்று இறந்து போன சிந்தனையாளன் பிளாட்டோவின் புகழ், அவர் மாணவர்களால் உலக நாடுகளில் தொடர்ந்து பரப்ப்பட்டது.
இவரது மரணம் ஒரு விசித்திர மாகவே நேர்ந்தது எனலாம். அழைப்பின் பேரில் தனது மாணவர்களில் ஒருவரின் திருமணத்திற்குச் சென்று இருந்தார். எல்லோருடனும் 
மகிழ்ச்சியாக இருந்தார். யார் பிளாட்டோ என வந்திருந்தவர்கள் அனைவரும் கேள்வி
கேட்க ஆரம்பித்தனர்.

💥 சிலர் இவரையே அந்தக்கேள்வி கேட்டனர், இவர் சிரித்துக்கொண்டே
நீங்கள் பார்க்க விரும்பும் பிளாட்டோ நான்தான் என்றார். எல்லோரும் மகிழ்ச்சிக்கடலில்
மூழ்கினர். இரவு திருமண விட்டுத் திண்ணையில் படுத்துக்கொண்டார். பொழுது புலர்ந்தது. மாணவர்கள் எல்லோரும் இவரை எழுப்பினார்கள்  ஆனால் பிளாட்டோ
எழுந்திருக்கவில்லை. உயிர் பிரிந்துவிட்டது. இவர் மறைந்த நாள் ஏதென்ஸ் நகரமே
இருள் சூழ்ந்து சோகமயமாகக் காட்சி அளித்தது. 

💥இவரது உடல் சகல மரியாதைகளுடன்
இடுகாட்டிற்கு எடுத்துச்சென்ற போது நகரமே அணி திரண்டு சென்றது,
இவர் வாழ்ந்த காலத்தில் இவரையும், இவரின் அரசியல் சிந்தனைகளையும் பலர் என்னி நகையாடினர். ஆனால் , இவர் உருவாக்கித் தந்த அரசியல் சித்தாந்தங்களும், சமூக
அமைப்பு நெறிமுறைகளும் அழியாப் புகழ் பெற்றவையாக இன்றும் திகழ்கின்றன.

💥💥💥💥💥💥💥💥💥

💥💥💥💥💥💥💥💥💥

No comments:

Powered by Blogger.