Breaking

ஜனவரி-06. நவீன மரபியலின்(Genetics) முன்னோடி, பட்டாணி செடிகளின் பண்புகளை விளக்கிய ஆஸ்திரிய தாவரவியலாளர்- கிரிகோர் யோஹன் மெண்டல் (Gregor Johann Mendel) பிறந்த தினம்.

நவீன மரபியலின்(Genetics)
முன்னோடி, பட்டாணி செடிகளின் பண்புகளை விளக்கிய ஆஸ்திரிய தாவரவியலாளர்- கிரிகோர் யோஹன் மெண்டல் (Gregor Johann Mendel) பிறந்த தினம்.

பிறப்பு:-

இவர், ஜூலை-20, 1822 இல்,
இன்றிசெட்டு, நவீ இல்றீன்  மாவட்டம், செக் குடியரசில் பிறந்தார். குடும்பத்தின் வறுமை காரணமாக தோட்ட வேலைகள் செய்து கொண்டு, படிப்பிலும் சுட்டியாக இருந்தார். 
பின் ஓல்முட்டுசு (Olmutz) மெய்யியல் நிறுவனத்தில் சேர்ந்து பயின்றார். 
1843ல் பெறனோவில் உள்ள அகத்தீனிய மடத்தில் சேர்ந்தார். அதன் பிறகு வியன்னாபல்கலைக்கழகத்தில் கல்வி பயிலச் சென்றார்.

ஆராய்ச்சிகள்:-

இவர், இயற்கை மீது அதிக அக்கறை உடையவர், ஆகையால்
தாவரங்கள் தவிர, வானியலிலும், பரிணாம வளர்ச்சிக் கோட்பாடுகளிலும் அவருக்கு ஈடுபாடு இருந்தது. 

மெண்டல், தன் மடத்திலிருந்த தோட்டத்திலேயே ஆராய்ச்சிப் பணிகளைச் செய்தார். 1856இல்இருந்து 
1863 வரை பல நுணுக்கமான வேறுபாடுகளைக் கொண்ட பட்டாணிச் செடிகளை வளர்த்து, அவற்றின் மரபுப் பண்புகளை ஆராய்ந்தார். 

குட்டையான - உயரமான செடிகளை இனக்கலப்பு செய்து வளர்த் தார். தன் ஆராய்ச்சியின் ஒவ்வொரு கட்டத்தையும் கவனமாகப் பதிவு செய்தார். 

புதிய செடிகளின் உயரம், இலைகளின் தோற்றம், பூக்களின் நிறம், விதைகளின் வீரியம், செடிகளின் ஆரோக்கியம் ஆகிவற்றை கூர்ந்து கவனித்து புள்ளி விவரங்களை சேகரித்தார். 

இதற்காக 8 ஆண்டுகள் பாடுபட்டு, 28,000 செடிகளை வளர்த்தார்.

செடிகளின் நிறம், தோற்றம், உயரம் ஆகிய குணாம்சங்களில், மரபியல் கூறுகள்தான் அடிப்படை  என்பதை கண்டுபிடித்தார்.

அதாவது, மரபுப் பண்புகள் சில குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டு ஒரு சந்ததியில் இருந்து அடுத்த சந்ததிக்குக் கடத்தப்படுவதைக் கண்டறிந்தார்.
பிற்காலத்தில், இவ்விதிகள் "மெண்டலின் விதிகள்" எனப் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டன. 

1866ல் இது குறித்த ஆராய்ச்சிக்கட்டுரை ஒன்றினை எழுதி, பொஹீமியாவில் உள்ள ப்ரன் இயற்கை வரலாற்று சங்கத்தில் 1865-ல் தனது ஆய்வுக் கட்டுரையான
"தாவரக் கலப்பினமாக்கல்" என்னும் ஆய்வுகளை
சமர்ப்பித்தார். 


விலங்குகளிலும் ஆய்வுகள்:-

தேனீக்களில் தனது ஆய்வைத் தொடங்கினார். 

தேனீக்களில் ஒரு கலப்பினத்தை 
அவர் தோற்றுவித்த போதிலும், அந்தக் கலப்பினம் நிலைத்து நிற்காமல் அழிந்து போனது. 

இராணித் தேனீயின் இனப்பெருக்க நடவடிக்கையை கட்டுப்படுத்துவதிலுள்ள சிக்கல்கள் காரணமாக, தேனீக்களின் மரபியல் பற்றிய சரியானதொரு புரிதலை அவரால் கொடுக்க முடியாமல் போனது. 

அவர் இனங்கண்டு எடுத்துரைத்த சில புதிய தாவர இனங்களுக்குரிய சீர்தர தாவரவியல் ஆசிரிய குறுக்கங்களில் (The standard botanical author abbreviation) ‘மெண்டல்' எனக் குறிப்பிடப்படுகின்றது.

பதவிகள்:-

1868-ல் மடாலயத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். 
 
மறைவு:-

இவர், வரையறுத்த கோட்பாடுகள் மரபியலின் அடிப்படையாக விளங்க, காரணமாக இருந்த இவர், ஜனவரி-06, 1884ஆம் ஆண்டு செக் குடியரசில் உள்ள பெறனோ என்ற இடத்தில் நீடித்தக் கல்லீரல் அழற்சி (chronic nephritis) நோயால் தனது, 62-வது வயதில் மரணமடைந்தார்.

No comments:

Powered by Blogger.