Breaking

வரலாறு காணாத பேரழிவு..கலங்கவைக்கும் ஆஸ்திரேலியக் காட்டுத்தீ...



வரலாறு காணாத பேரழிவு..கலங்கவைக்கும் ஆஸ்திரேலியக்  காட்டுத்தீ...

பூமியின் நுரையீரலாகக் கருதப்படும் அமேசானில் பேரழிவை ஏற்படுத்திய காட்டுத்தீயே இன்னும் முழுவதுமாக அடங்கவில்லை, அதற்குள் கடந்த இருபது வருடங்களில் இல்லாத அளவுக்கு ஆஸ்திரேலியாவில் பற்றி எரிகிறது காட்டுத்தீ. மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் இதன் விளைவுகளால் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களின் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். அக்காடுகளையே வாழ்விடமாகக் கொண்ட விலங்குகள் வெப்பத்தாலும், நீரற்றும், நெருப்பில் கருகியும் இறந்துபோகும் மனதை உலுக்கும் புகைப்படங்கள் தினந்தினம் வெளியாகிக்கொண்டிருக்கின்றன

இந்நிலையில் விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட இந்தப் பகுதிகளின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
அமெரிக்காவைச் சேர்ந்த மக்ஸார் என்னும் விண்வெளி தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று ஆர்போஸ்ட் என்னும் சுற்றுலா நகரை எடுத்த புகைப்படம் முழுவதும் அடர்த்தியான கரும்புகை சூழ்ந்திருக்கிறது. டாஸ்மன் கடலுக்கு மேலே சுமார் 433 கிலோமீட்டர் உயரத்திலிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்தால் படம்பிடிக்கப்பட்ட மற்றொரு புகைப்படம், சிட்னி நகரைச் சுற்றிப் பரவி இருக்கும் காட்டுத்தீயைத் தெளிவாகக் காட்டுகிறது.
மேலும் நாசாவின் Earth Observatory ஆறு மாத இடைவெளியில் எடுக்கப்பட்ட இரு புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு மாகாணங்களான விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ், சென்ற ஆண்டு ஜூலை 24-ஆம் நாள் லேன்ட்சாட்-8 செயற்கைக்கோளால் எடுக்கப்பட்ட முதல் படத்தில் பரந்த பசுமையான நிலப்பரப்பு காணப்படுகிறது.

அதே நிலப்பரப்பை ஆறுமாதம் கழித்து அதாவது இந்த வருடம் ஜனவரி 1-ம் தேதி எடுக்கப்பட்ட இரண்டாவது புகைப்படத்தில் மிக அடர்த்தியான புகையால் மூடப்பட்டுக் காணப்படுகிறது.
முன்பு எப்பொழுதும் இல்லாது போல் உலகெங்கும் அதிகரித்து வருகின்றது காட்டுத்தீ. முன்னேற்றம் என்ற பெயரில் இயற்கை வளங்களை அழித்து வரும் மனிதக் குலத்திற்கு எதிர்காலம் இப்படிதான் இருக்கப்போகிறது என இயற்கை தரும் ஒரு எச்சரிக்கைதான் இது.

No comments:

Powered by Blogger.