சூரியன் உதிக்காத தீவு
சூரியன் உதிக்காத தீவு
நார்வேயின் வடக்கில் டிரோம்சோ நகர் அருகே 'சொம்மரே' என்ற தீவு மீனவ கிராமம் உள்ளது. மக்கள் தொகை 321. பரப்பளவு 0.34 சதுர கி.மீ. இங்கு நவ., - ஜன., வரை தொடர்ந்து இருட்டாகவே இருக்கும். சூரிய வெளிச்சமே இருக்காது. ஆனால் மே 18 - ஜூலை 26 வரை, மொத்தம் 69 நாட்கள் தொடர்ந்து சூரியவெளிச்சம் மட்டுமே இருக்கும். இதனால் இங்குள்ள மக்களுக்கு பகல், இரவு எது என்பதே தெரியாது. ஆர்டிக் வட்டத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளதால், இத்தீவில் இப்படி ஒரு வினோதமான காலநிலை நிலவுகிறது. இவர்கள் கால நேரம் பார்த்து செயல்படுவதில்லை.
நெல் ஆராய்ச்சி
சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் பிலிப்பைன்ஸ் நாட்டின் லாஸ் பனோஸ் நகரை தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது. இதில் 17 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. 1,300 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். நெல் தரத்தை மேம்படுத்துவது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. பட்டினி, வறுமையை போக்குதல், நெல் விவசாயிகள், நுகர்வோரின் சுகாதாரத்தை மேம்படுத்துதல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு, 1960ல் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. உலகில் இந்தியா உள்பட 15 நாடுகளில் இதன் ஆராய்ச்சி மையங்கள் செயல்படுகின்றன.

No comments: