பெற்றோர்களின் கவனத்திற்கு சாப்பிடுவது குழந்தைகளின் விருப்பம்
சாப்பிடுவது குழந்தைகளின் விருப்பம்
குழந்தைகளை சாப்பிட வைப்பது என்பது பலருக்கும் கடினமான பணியாக உள்ளது. இந்நிலையில் குழந்தைகள் சத்தான உணவு குறித்த நிகழ்ச்சிகளை பார்த்த பின், மூன்று மடங்கு அதிகமாக சத்தான உணவை சாப்பிடுகின்றனர் என நெதர்லாந்தின் தில்பர்க் பல்கலை ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 - 12 வயதுக்குட்பட்ட 125 குழந்தைகளை, சத்தான உணவு குறித்த நிகழ்ச்சியை பத்து நிமிடம் பார்க்க வைத்தனர். இதன் பின் அவர்களுக்கு பல வகையான 'ஸ்நாக்ஸ்' தரப்பட்டது. இதில் சத்தான பண்டங்களை மட்டும், நிகழ்ச்சி பார்த்த குழந்தைகள் எடுத்து சாப்பிட்டது.
பனி மூடும் சாலை
ஹிமாச்சலபிரதேசத்தின் மணாலி - லடாக் யூனியன் பிரதேசத்தின் லே பகுதிகளை இணைக்கும் விதமாக 'லே - மணாலி' தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இதன் துாரம் 490 கி.மீ. இது ஆண்டுக்கு நான்கரை மாதங்கள் (மே அல்லது ஜூன் முதல் அக்டோபர் பாதி வரை) மட்டுமே திறந்திருக்கும். அக்டோபர் பாதிக்குப்பின், சாலை முழுவதும் பனியால் மூடப்பட்டு விடும். இச்சாலையை ராணுவத்தின் எல்லைச்சாலை கழகம் அமைத்து பராமரிக்கிறது. ராணுவத்தின் கனரக வாகனங்களுக்கு இச்சாலை உதவுகிறது. இது கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 13 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளது.

No comments: