இனியும் ஹேர்டை வேண்டாம்... இயற்கை முறையில் நாமே செய்வோம்.. பின்பு தலைக்கு பயன்படுத்தவும்..
நரைமுடியை மறைக்க 'டை' அடிப்பது சர்வ சாதாரணம்தான். திரவம் மற்றும் பவுடர் வடிவங்களில் இந்த 'டை' எளிதாகவும் விலை மலிவாகவும் கிடைக்கிறது.
ஆனாலும், இதிலுள்ள கெமிக்கல்கள் பலருக்கும் அலர்ஜி எனப்படும் ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன. சில 'டை'க்களால் சிலருக்கு முடிகள் உதிரவும் வாய்ப்புள்ளது.
எனவே, பக்கவிளைவுகளே இல்லாத பின்வரும் இயற்கையான வழிகள் மூலம் நரைமுடிக்கு நாம் தீர்வு காணலாம்:
எலுமிச்சை + பாதாம் + நெல்லி:
பாதாம் எண்ணெயுடன் எலுமிச்சைச் சாற்றையும் நறுக்கிய நெல்லிக்காய்த் துண்டுகளையும் கலந்து, அக்கலவையை குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருக்க வேண்டும்.
3 நாட்களுக்குப் பின் அக்கலவையை எடுத்து, தலைமுடியில் மசாஜ் செய்து தேய்த்து, அரைமணி நேரம் வரை ஊறவைக்க வேண்டும். பின்னர், குளிர்ந்த நீரில் ஷாம்பூவால் தலைமுடியைக் கழுவ வேண்டும்.
தினந்தோறும் இதைத் தவறாமல் செய்து வந்தால், சில நாட்களிலேயே நரைமுடியைத் தேட வேண்டியிருக்கும்.
நெல்லி + தே. எண்ணெய்:
சின்னச் சின்னத் துண்டுகளாக நெல்லிக்காயை வெட்டி, அவற்றை நிழலில் காயவைத்து, தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைக்க வேண்டும்.
பின்னர், அக்கலவையை நன்கு ஆறவைத்து, முடிகளில் தடவி, சிறிது நேரத்திற்குப் பிறகு ஷாம்பூவால் கழுவ வேண்டும். இதைத் தொடர்ந்து செய்து வர, நரைமுடிகள் மறையும்.
நெல்லிக்காய் ஊறவைத்த நீரால் தினமும் தலைமுடியைக் கழுவி வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.
தே. எண்ணெய் + கறிவேப்பிலை:
சிறிதளவு கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து கொதிக்க வைத்து, பின் அதை நன்றாக ஆறவைக்க வேண்டும்.
இந்தக் கலவையைக் கொண்டு முடிகளை நன்றாக மசாஜ் செய்து தேய்த்து, சுமார் அரைமணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
பின்னர் வெதுவெதுப்பான நீரில் ஷாம்பூவினால் முடிகளைக் கழுவினால், நரைகள் மறையும்.
கறிவேப்பிலை + மோர்:
மோரையும் கறிவேப்பிலையையும் தலைமுடியில் தேய்த்து, அரைமணி நேரத்திற்குப் பின் முடியை மெல்ல மசாஜ் செய்து, நீரில் நன்றாகக் கழுவ வேண்டும்.
தினமும் இதைச் செய்து வந்தால் அடுத்த சில நாட்களிலேயே நரைமுடிக்கு 'பை' சொல்லலாம்.
கேரட் விதை எண்ணெய்:
4 டீக்கரண்டி சீசேம் எண்ணெயுடன் சிறிதளவு கேரட் விதை எண்ணெயைக் கலந்து, அக்கலவையை தலைமுடியில் தேய்க்க வேண்டும்.
சில நிமிடங்கள் நன்றாக ஊறிய பின், ஷாம்பூவால் நீர்கொண்டு கழுவினால் விரைவிலேயே நரைமுடிகள் காணாமல் போகும்.


No comments: