Breaking

பிரிட்ஜில் 'காய்கறி செடி'..

பிரிட்ஜில் 'காய்கறி செடி'..



காய்கறி, பழங்கள் கெட்டுப்போகாமல் இருக்க 'பிரிட்ஜ்' பயன்படுகிறது. தென்கொரியாவின் 'எல்.ஜி.,' நிறுவனம் காய்கறிகளை விளைவிக்கும் வகையிலான 'பிரிட்ஜ்' அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் செங்குத்தாக 4 அறைகள் இருக்கும். இதில் ஒவ்வொரு அறையிலும் ஆறு காய்கறி செடி விதைகளை பயிரிடலாம். செடி வளர தேவையான ஒளி, தண்ணீர் போன்றவற்றை, ஸ்மார்ட்போன் செயலி மூலம் 'செட்' செய்து கொள்ளலாம். கண்ணாடி கதவு உள்ளதால், செடியின் வளர்ச்சியை கண்காணிக்கலாம். இதனை காய்கறி கிடைக்காத பகுதி மக்கள் பயன்படுத்தலாம்.



உலகின் தற்போதைய பிரதமர்களில் நீண்டகாலம் பதவியில் இருப்பவர் கம்போடியா பிரதமர் ஹன் சென். 

1985 ஜன., 14ல் பொறுப்பேற்ற இவர், தொடர்ந்து 35 ஆண்டுகளாக நீடிக்கிறார். 1952 ஆக., 5ல் பிறந்தார். இயற்பெயர் ஹன் நியாங்க். இளம் வயதிலேயே அரசியலில் நுழைந்தார். 1979 - 1985 வரை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்தார். 2015 முதல் கம்போடியா மக்கள் கட்சியின் தலைவராக இருக்கிறார். இவருக்கு அடுத்த இடத்தில் சமோவா நாட்டின் பிரதமர் டி.ஏ.செய்லிலி மாலிலீகாய் இருக்கிறார். 1998 நவ., 23 முதல் பதவியில் உள்ளார்.

No comments:

Powered by Blogger.