Home
FEBRUARY
பிப்ரவரி-25. 💉 மருத்துவத்துக்கான நோபல் பெற்ற-ஜார்ஜ் ரிச்சர்ட்ஸ் மினாட் (George Richards Minot) மறைந்த தினம்.
பிப்ரவரி-25. 💉 மருத்துவத்துக்கான நோபல் பெற்ற-ஜார்ஜ் ரிச்சர்ட்ஸ் மினாட் (George Richards Minot) மறைந்த தினம்.
19:01
Read
💉💉💉💉💉💉💉💉💉
இன்று நினைவு நாள்-பிப்ரவரி-25.
💉 மருத்துவத்துக்கான நோபல் பெற்ற-ஜார்ஜ் ரிச்சர்ட்ஸ் மினாட் (George Richards Minot) மறைந்த தினம்.
💉 *அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலம் பாஸ்டன் நகரில் (1885) பிறந்தார். தந்தை உட்பட குடும்பத்தில் பலரும் மருத்துவர்கள் என்பதால், இவருக்கும் இயல்பாகவே மருத்துவத்தில் ஆர்வம் பிறந்தது.*
💉 *தெற்கு கரோலினாவின் இயற்கை அழகின் தாக்கம் இவரை எழுத்தாளராக மாற்றியது.* பட்டாம்பூச்சிகள் *பற்றி இவர் 1902இல் எழுதிய கட்டுரைகள், அறிவியல் இதழ்களில் வெளிவந்தன.*
💉 *பள்ளிப் படிப்புக்குப் பிறகு, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் பணிபுரிந்தார். மருத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.* ரத்தத்தில் காணப்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வுகள் *மேற்கொண்டார். இதுகுறித்து பல கட்டுரைகளையும் எழுதினார்.*
💉 ரத்தசோகையின் பல்வேறு வகைகள் குறித்து ஆய்வு *செய்வதற்காக மசாசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் சேர்ந்தார். ஹார்வர்டு மருத்துவக் கல்லூரியில் துணைப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.*
💉 ஆர்த்ரைடீஸ், ரத்தம் உறைதல், ரத்தக் கோளாறுகள், ரத்தப் பரிமாற்றத்தின்போது ஏற்படும் பாதிப்புகள், நிணநீர் திசுக்களின் சீர்குலைவுகள், ரத்த சிவப்பணு செயல்பாடுகள், ரத்தப் புற்றுநோய், ரத்த சோகை *தொடர்பாக பல ஆய்வுகளை மேற்கொண்டார்.*
💉 ரத்த சிவப்பணுக்கள் பற்றிய இவரது கண்டுபிடிப்பு *மகத்தானது. இவற்றை உருவாக்கும்* எலும்பு மஜ்ஜையின் செயலிழப்பு காரணமாகவே ரத்தசோகை ஏற்படுகிறது *என்பதைக் கண்டறிந்தார்.* உணவுப் பழக்கங்களே இதற்குக் காரணம் *என்பதையும் கண்டறிந்தார்.* புற்றுநோயின் பல்வேறு வகைகள் *குறித்து ஆராய்ந்தார்.*
💉 ரத்தசோகை குறித்து ஆராய்ச்சி செய்துவந்த வில்லியம் மர்பி, ஜார்ஜ் விம்பிள் *ஆகிய ஆராய்ச்சியாளர்களுடன் தொடர்பு ஏற்பட்டது.* ரத்தசோகையால் பாதிக்கப்பட்ட நாய்களை சோதனை முறையில் விம்பிள் *குணப்படுத்தியதைக் கண்டார். அவர்களுடன் இணைந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். இவர்களது ஆராய்ச்சிகள், ரத்தசோகைக்கான சிகிச்சை குறித்த கண்டுபிடிப்புக்கும் வழிவகுத்தன.*
💉 *குணப்படுத்த முடியாது என்று கருதப்பட்ட* பெர்னீஷியஸ் ரத்தசோகைக்கு, கல்லீரல் மூலம் சிகிச்சை அளிக்க முடியும் *என்பதைக் கண்டறிந்தனர். இது மருத்துவ வரலாற்றில் மகத்தான வளர்ச்சியாக கருதப்பட்டது. இதற்காக* வில்லியம் மர்பி, ஜார்ஜ் விப்பிள் *ஆகியோருடன் இணைந்து* மருத்துவத்துக்கான நோபல் பரிசை *1934ல் பெற்றார்.*
💉 *ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக 1928-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். பல்வேறு மருத்துவ நிறுவனங்கள், அமைப்புகளுடன் தொடர்பு கொண்டிருந்த இவர்,* உடலியல் குறித்த ஆராய்ச்சிகள், பரிசோதனைகளில் மகத்தான பங்களிப்புகளை *வழங்கினார்.*
💉 *உலகப் புகழ்பெற்ற மருத்துவ ஆய்வாளராகத் திகழ்ந்தவரும், வாழ்நாள் முழுவதும் ரத்தசோகை பாதிப்புகள் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு, சிறந்த சிகிச்சை முறையை வழங்கியவருமான ஜார்ஜ் மினாட், நீரிழிவு நோய் தொடர்பான சிக்கலால் உடல்நலம் பாதிக்கப்பட்டு, 1950-ம் ஆண்டு மறைந்தார்.*
💉💉💉💉💉💉💉💉💉
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பிப்ரவரி-25. 💉 மருத்துவத்துக்கான நோபல் பெற்ற-ஜார்ஜ் ரிச்சர்ட்ஸ் மினாட் (George Richards Minot) மறைந்த தினம்.
Reviewed by JAYASEELAN.K
on
19:01
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
19:01
Rating: 5
Tags :
FEBRUARY


No comments: