Home
FEBRUARY
பிப்ரவரி- 25 அறிவியலாளர், வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்- கிளென் தியோடர் சீபோர்க் (Glenn Theodore Seaborg) மறைந்த தினம்.
பிப்ரவரி- 25 அறிவியலாளர், வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்- கிளென் தியோடர் சீபோர்க் (Glenn Theodore Seaborg) மறைந்த தினம்.
18:57
Read
இன்று நினைவு நாள்:- பிப்ரவரி- 25
அறிவியலாளர், வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்- கிளென் தியோடர் சீபோர்க் (Glenn Theodore Seaborg) மறைந்த தினம்.
பிறப்பு:-
மிச்சிகன் மாநிலத்தில் இஷ்பெமிங் என்ற நகரில் ஏப்ரல்-19,1912 இல் பிறந்தார்.
மேல்நிலைக் கல்வி பயிலும்போது வேதியியல்
மற்றும் இயற்பியலில் ஆர்வம் பிறந்தது.
லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றார்.
பெர்க்கேலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றார்.
கண்டுபிடிப்பு:-
தனது ‘இன்டராக் ஷன் ஆஃப் ஃபாஸ்ட் நியுட்ரியன்ஸ் வித் லீட்’ என்ற ஆய்வுக் கட்டுரையில், அணுப்பிளவு (நியுக்ளியர் ஸ்பாலேஷன்) என்ற வார்த்தையை அறிமுகம் செய்தார்.
அணு மருத்துவத் துறை ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்.
புதிய ஐசோடோப் அயர்ன், அயர்ன்-59-ஐக்
கண்டறிந்தார்.
இது மனித உடலில் ஹீமோகுளோபின் குறித்த ஆராய்ச்சிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. ஐசோடோப் கூறுகளைக் கண்டறிந்தார். இவை பல நோய்களைக் கண்டறியவும்,
சிகிச்சை அளிக்கவும் பயன்பட்டது.
குறிப்பாக, அயோடின்-131, தைராய்டு நோய்க்கான சிகிச்சைக்குப் பயன்பட்டது. யுரேனியப் பின் தனிமங்கள் (transuranic elements) ஒருங்கிணைப்பு, ஆராய்ச்சி மற்றும்
கண்டுபிடிப்புகளை மேற்கொண்டார்.
விருதுகள்:-
அமெரிக்க இயற்பியல் விஞ்ஞானி எட்வின்
மெக்மிலானுடன் இணைந்து இவருக்கு 1951-ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
1957- Perkin மெடல்,
1959-Enrico Fermi விருது.
ஆக்டினைடுகள்:-
இந்த ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு ஆக்டினைடுகள் (Actinide) கருத்துருவை
மேம்படுத்துவதற்கு வழிகோலியது.
ஆக்டினைடுகள் என்பது 15 வேதியியல் தனிமங்கள் கொண்ட ஒரு
வரிசை.
அணுக்கரு வேதியியலின் முக்கிய கிளைகளில் ஒன்றான ஆக்டினைடுகள் வேதியியலை இவர் ஆராய்ந்தார்.
கதிரியக்கம் கொண்ட புளுட்டோனியம், குயுரியம், பெர்க்கெலியம், ஃபெர்மியம், நொபிலியம் உள்ளிட்ட மொத்தம் 10 யுரேனியப் பின் தனிமங்களை (தனிம அட்டவணையில் யுரேனியத்துக்குப் பின்னால் வரும் தனிமங்கள்) ஆராய்ந்தார்.
அணு ஆற்றலை வணிக நோக்கங்களுக்காகவும் அமைதிப் பயன்பாடுகளுக்காகப் பயன்படுத்துவது குறித்தும் கட்டுரைகளை எழுதி வெளியிட்டார்.
தனிமங்கள் குறித்த இவரது ஆராய்ச்சிகளில் எலிமன்ட் 106-க்கு ‘சீபோர்ஜியம்’ என இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
புளுட்டோனியம் வேதியியலுக்கு மகத்தான பங்களிப்பை வழங்கியவர் எனப் போற்றப்படுகிறார்.
இறப்பு:-
அணு வேதியியலுக்கு மகத்தான பங்களிப்பை
வழங்கிய கிளென் தியோடர் சீபோர்க் பிப்ரவரி-25, 1999 ஆம் ஆண்டு, தனது 87-வது வயதில் மறைந்தார்.
பிப்ரவரி- 25 அறிவியலாளர், வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்- கிளென் தியோடர் சீபோர்க் (Glenn Theodore Seaborg) மறைந்த தினம்.
Reviewed by JAYASEELAN.K
on
18:57
Rating: 5
Tags :
FEBRUARY

No comments: