வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.. தமிழகத்தில் மார்ச் முதல் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 30.! நடைமுறைக்கு வரும் என ராமர் பிள்ளை கூறுகிறார் !!
வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.. தமிழகத்தில் மார்ச் முதல் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 30.! நடைமுறைக்கு வரும் திட்டம்.!!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மம்சாபுரத்தை சார்ந்தவர் ராமர்பிள்ளை. உலக வங்கி, ஐக்கிய நாடுகள் சபை, மத்திய அரசின் கூட்டு திட்டத்தில் தன்னுடைய மூலிகைப் பெட்ரோலை பதிவு செய்துள்ளார்.
ஜனவரி 29 முதல் சென்னையில் விற்பனை தொடங்கியுள்ளது. தென்காசி, விருதுநகர், தேனி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் விற்பனை முகவர்கள் அறிமுக விழா ராஜபாளையத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், பிப்ரவரி 27 முதல் மூலிகைப் பெட்ரோல் நேரடியாக கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
ஒரு லிட்டர் 30 ரூபாய் என அரசு விலை நிர்ணயித்து உள்ளது.
கன்னியாகுமரி - நாகர்கோவில் இடைப்பட்ட பகுதியில் நாள் ஒன்றுக்கு 15 லிட்டர் மூலிகைப் பெட்ரோல் தயாரிக்கும் வகையில் தொழிற்சாலை தயாராக உள்ளது.
கழிவு நீரில் இருந்து தயாரிக்கப்படும் இந்த மாற்று எரிபொருளை தயாரிக்க எவ்வித தடையும் விதிக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் அளித்த உரை தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் மார்ச் இறுதிக்குள் தமிழகம் முழுவதும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.


No comments: