Home
APRIL
ஏப்ரல்-01. மாற்றத்துக்கான பெண்கள் அமைப்பு, மகளிர் வளர்ச்சி அமைப்பு, மரங்களின் தாய்- வாங்கரி மாத்தாய் (Vangari Maathai)பிறந்த தினம்.
ஏப்ரல்-01. மாற்றத்துக்கான பெண்கள் அமைப்பு, மகளிர் வளர்ச்சி அமைப்பு, மரங்களின் தாய்- வாங்கரி மாத்தாய் (Vangari Maathai)பிறந்த தினம்.
07:10
Read
இன்று பிறந்த நாள்:- ஏப்ரல்-01.
மாற்றத்துக்கான பெண்கள் அமைப்பு, மகளிர் வளர்ச்சி அமைப்பு, மரங்களின் தாய்- வாங்கரி மாத்தாய் (Vangari Maathai)பிறந்த தினம்.
பிறப்பு:-
ஏப்ரல்-01,1940 இல் கென்யாவில் இகதி ஊரில் பிறந்தார்.
1964 இல் அமெரிக்காவில் உயிரியளில் இளங்கலை, பிறகு முதுகலை பட்டம் பெற்றார்.
1971 இல் நைரோபி யூனிவர்சிட்டியில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் பெண் பேராசிரியர்.
சுற்றுசூழல் பணிகள்:-
இவர் காடுகளைக்காக்க
பசுமை பட்டை இயக்கம் (Green Belt Movement) என்ற ஒன்றைத் துவக்கினார்.
மேலும் உலகச் சுற்றுச் சூழல் நாள் அன்று (சூன் 5) தம் வீட்டின் தோட்டத்தில் ஒன்பது செடிகளை நட்டு மரங்களை வளர்க்கும் பணியில் ஈடுபட்டார். இவ்வாறு பசுமைப் பட்டை இயக்கம் என்பதைத் தொடங்கினார். ஆப்பிரிக்கக் காடுகளை மீண்டும் உருவாக்குவதும் காடுகள் அழிப்பினால் ஏற்பட்ட மக்களின் வறுமையை ஒழிப்பதும் இவ்வியக்கத்தின் நோக்கங்கள் ஆகும்.30 ஆண்டுகளில் மூன்று கோடி மரங்களை வளர்க்க ஏழைப் பெண்களைத் திரட்டினார்.
1980 களில் பெண்களுக்கான தேசியக் கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.பின்னர் சனநாயக ஆதரவு இயக்கத்தின் தலைவர்களில் ஒருவராக ஆனார்.நைரோபில் இருந்த ஒரே பூங்காவான உகூரு என்னும் பூங்காவை அழித்து 62 அடுக்குகள் கொண்ட பெரிய கட்டடத்தைக் கட்ட அரசு முனைந்தபோது மாத்தாய் போராட்டம் நடத்தியதால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. பல்வேறு சமூக முன்னேற்றங்களுக்கான போராட்டங்களில் இவர் ஈடுபட்டதால் மீண்டும் மீண்டும் சிறைப்படுத்தப் பட்டார். இவருடைய இடைவிடா போராட்டங்களினால் உலகம் இவரைத் திரும்பிப் பார்த்தது.
பெண்கள் வளர்ச்சி:-
மாற்றத்திற்கான பெண்கள் என்னும் ஓர் அமைப்பைத் தொடங்கினார்.
பெண்களையும் சமூக பணிகளில் ஈடுபடுத்தி கல்வி, குடும்ப கட்டுப்பாடு, ஊட்டச்சத்து, ஊழல் எதிர்ப்பு களத்தில் போராட வைத்தார்.
விருதுகள்:-
1991-கோல்ட்மேன் விருது,
2004-அமைதிக்கான நோபல் பரிசு,
2007-இந்திரா காந்தி விருது(இந்தியா).
கென்யா-செஞ்சிலுவை சங்க இயக்குனராக இருந்தார். 2002-நாடாளுமன்ற உறுப்பினரானார்.
2003 ஆம் ஆண்டில் அமைந்த கூட்டணி ஆட்சியில் இணை அமைச்சராக ஆனார். இவருக்குப் பிடித்தமான சுற்றுச் சூழல் இயற்கை வளங்கள் பாதுகாப்புத் துறையைக் கவனித்துக் கொள்ளும் பணியை மேற்கொண்டார்.
மறைவு:-
மக்களாட்சி,அமைதி, சுற்றுசூழல் காத்தவர் என்றழைக்கப்பட்ட இவர் செப்டம்பர்-25, 2011 ஆம் ஆண்டு தனது 71 வது வயதில் மறைந்தார்.
தத்துவம்:-
தன் வீட்டு தோட்டலில் 9 மரக்கன்றுகள் நட்டேன், ஆனால் தற்போது 5கோடி மரங்கள் ஆகிவிட்டது-Vangari Maathai.
ஏப்ரல்-01. மாற்றத்துக்கான பெண்கள் அமைப்பு, மகளிர் வளர்ச்சி அமைப்பு, மரங்களின் தாய்- வாங்கரி மாத்தாய் (Vangari Maathai)பிறந்த தினம்.
Reviewed by JAYASEELAN.K
on
07:10
Rating: 5
No comments: