Home
MARCH
மார்ச்-07. 🗾 *நோபல் பெற்ற உயிரியலாளரும், கல்வியாளருமான-* டேவிட் பால்டிமோர் (David Baltimore) *பிறந்த தினம்.*
மார்ச்-07. 🗾 *நோபல் பெற்ற உயிரியலாளரும், கல்வியாளருமான-* டேவிட் பால்டிமோர் (David Baltimore) *பிறந்த தினம்.*
17:39
Read
🗾🗾🗾🗾🗾🗾🗾🗾🗾
*இன்று பிறந்த நாள்: மார்ச்-07.
🗾 *நோபல் பெற்ற உயிரியலாளரும், கல்வியாளருமான-* டேவிட் பால்டிமோர் (David Baltimore) *பிறந்த தினம்.*
____________________
🗾 *அமெரிக்காவின் நியூயார்க் நகரில் (1938) பிறந்தார். பள்ளிப் பருவத் தில் கணிதத்தில் சிறந்து விளங்கி னார். உயர்நிலைப் பள்ளிப் பருவத் தில் ஜாக்சன் நினைவு ஆய்வுக்கூடத்தின் உயிரியல் ஆய்வுத் திட்டத்தில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தபோது இவரது ஆர்வம் அறிவியல் பக்கம் திரும்பியது.*
🗾 *உயிரியல், வேதியியல் பாடங் களை ஸ்வார்த்மோர் கல்லூரியில் கற்றார். 1960-ல் பட்டம் பெற்றார். படிக்கும் காலத்திலேயே, கோல்டு ஸ்பிரிங் ஹார்பர் ஆய்வுக்கூடத்தில் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.*
🗾 *மூலக்கூறு உயிரியல் பற்றிய ஆராய்ச்சிகளில் அதிக ஆர்வத்தோடு ஈடுபட்டார்.*
🗾 *மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் (எம்ஐடி) உயிரி இயற்பியல் பயின்றார்.*
🗾 *1964-ல் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றார். 1965-ல் சால்க் உயிரியல் கல்வி நிறுவனத்தில் இணை ஆராய்ச்சியாளராகப் பணியாற்றினார்.*
🗾 *எம்ஐடி பேராசிரியராக 1972-ல் நியமிக்கப்பட்டார். புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சியாளராக சேர்ந்தார்.*
🗾 வைரஸ்களின் அமைப்பு, வைரல் ஆர்என்ஏ தொகுப்புகள், வைரஸ்களின் சுய இனப் பெருக்கம், மனிதர்கள் மற்றும் விலங்குகளின் நோய் எதிர்ப்பு அமைப்பு களில் அவற்றின் தாக்கம் *ஆகியவை குறித்து ஆராய்ந்தார்.*
🗾 *நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவும் புரோட்டீன்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தினார். எய்ட்ஸ் நோய்க்கு தடுப்பு மருந்து கண்டறிவதற்கான ஆராய்ச்சிக் குழுவில் முக்கிய பங்காற்றினார்.*
🗾 *வைரஸ் வகைகள் மற்றும் புற்றுநோய் குறித்த ஆராய்ச்சிகளுக்காக உடல் இயங்கியல் மற்றும் மருத்துவத்துக்கான நோபல் பரிசை ஹோவர்டு எம்.டெமின், ரெனட்டோ டல்பெக்கோ ஆகியோருடன் இணைந்து 1975-ல் பெற்றார்.*
🗾 *மாணவர்களுக்காக ஏராளமான கருத்தரங்குகள் நடத்தி அவர்களது கற்கும் திறனை மேம்படுத்தினார். மாணவர்கள் பல ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வழிநடத்தினார். 1997-ல் கலிபோர்னியா தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். ஸ்டெம்செல் ஆராய்ச்சிகளை ஆதரித்தார்.*
🗾 *அமெரிக்க அறிவியல் மேம்பாட்டுக் கழகத் தலைவராக 2007-ல் நியமிக்கப்பட்டார்.* எலும்பு மஜ்ஜையில் *உள்ள* ஸ்டெம்செல்களை மரபணு மாற்ற தொழில்நுட்ப *உதவியுடன்* ஹெச்ஐவி வைரஸ்களுக்கு எதிரான ஆன்டிபாடிகளை *உற்பத்தி செய்யும்* பி-செல்களாக மாற்ற முடியும் *என 2009-ல் நிரூபித்தார்.*
🗾 *இவரது இந்த ஆய்வு முனைப்பை அடிப்படையாகக் கொண்டு உயிரணு மருந்து தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்யக்கூடிய பி-செல்களின் ஆயுட்காலத்தை அதிகரிக்கச் செய்யும் முயற்சிகளும் நடக்கின்றன.*
🗾 *குழந்தைகளைத் தாக்கும் என்சைம் குறைபாட்டு நோய் சிகிச்சைக்கும் இது பயன்படும் என்று கண்டறியப்பட்டுள்ளது.*
🗾 ‘குஸ்டவ் ஸ்டென்’, ‘வாரன் ட்ரையனியல்’, ‘கெயிர்டனர்’, ‘எல்லி லில்லி’ *உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றார். அமெரிக்காவின் உயரிய அறிவியல் விருதான* ‘நேஷனல் மெடல்ஸ் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி’ *விருது 2000-ல் இவருக்கு வழங்கப்பட்டது.*
🗾 *நோய் எதிர்ப்பியல், நச்சு உயிரியல், புற்றுநோய் ஆய்வு, உயிரித் தொழில்நுட்பம், டிஎன்ஏ என பல்வேறு துறைகளில் மகத்தான பங்களிப்பை டேவிட் பால்ட்டிமோர் வழங்கியுள்ளார். 78 வயதாகும் இவர், பல அறிவியல் அமைப்புகளில் ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார்.*
🗾🗾🗾🗾🗾🗾🗾🗾🗾
மார்ச்-07. 🗾 *நோபல் பெற்ற உயிரியலாளரும், கல்வியாளருமான-* டேவிட் பால்டிமோர் (David Baltimore) *பிறந்த தினம்.*
Reviewed by JAYASEELAN.K
on
17:39
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
17:39
Rating: 5


No comments: