Breaking

மார்ச்-07. 🌠 *செருமானிய வானியலாளரும் வழக்குரைஞரும், வரைபடவியலாளரும்-* ஜோஹன் பாயர் (Johann Bayer) *மறைந்த தினம். ____________________





🌠🌠🌠🌠🌠🌠🌠🌠

*நினைவு நாள்: மார்ச்-07.

🌠 *செருமானிய வானியலாளரும் வழக்குரைஞரும், வரைபடவியலாளரும்-* ஜோஹன் பாயர் (Johann Bayer) *மறைந்த தினம்.
____________________

🌠 *இவர் 1572இல் செருமனியில் உள்ள ரைன் நகரில் பிறந்தார். தனது இருபதாவது வயதில் 1592 இல் இங்கோல்ஸ்டாடிட் பல்கலைகழகத்தில் தத்துவம் மற்றும் சட்டம் படித்தார். பின்னர் ஆக்ஸ்பர்க் நகருக்கு குடிபெயர்ந்தார். 1612 இல் நகராண்மைக் கழக வழக்குரைஞராக ஆனார்.*

🌠 *தொழில்முறையில் வழக்குரைஞரான பாயர் தொல்லியல் அகழ்வாய்வு, கணிதம், வானியல் போன்ற பல துறையிலும் ஆர்வம் மிக்கவராக இருந்தார்.*



🌠 *இவரது* வானவியல் ஆய்வால் குறிப்பாக விண்மீன் குழுவின் நிலைகளை ஆய்வு *செய்ததால் தான் பெரிதும் அறியப்படுகிறார். இறுதி வரை திருமணமே செய்யாது வாழ்ந்த பாயர் 1625 இல் இறந்தார்.*

🌠 *இவர் 1603இல் முன்*-தொலைநோக்கிக் கால வானியல் அட்டவணையை *வெளியிட்டார். அதில் இவர்* டைக்கோ பிராகி *1602இல் வெளியிட்ட அட்டவணையில் உள்ளதைவிட கூடுதலாக* 1000 விண்மீன்களையும் 12 விண்மீன்குழுக்களையும் *சேர்த்தார்.*

🌠 *இவர்தான் விண்மீன்களைக் கிரேக்க எழுத்துப் பெயரிட்டு அழைக்கும் முறையை உருவாக்கினார்.*

🌠 *உயர்பொலிவுள்ள விண்மீன்களை ஆல்ஃபா* எனவும் *அடுத்த தரநிலைப் பொலிவுள்ள விண்மீன்களை பீட்டா* எனவும் இவரிட்ட பெயரீடு இன்றளவும் வழக்கில் உள்ளது. 

🌠 *இதன்படி அக்குவிலா விண்மீன்குழுவில் உள்ள உயர்பொலிவுள்ள விண்மீன்* ஆல்ஃப் அக்குவிலா *என்று அழைக்கப்படுகிறது.*

🌠 *நிலவின் குழிப்பள்ளம் ஒன்று* பாயார்க் குழிப்பள்ளம் *என இவரது பெயரால் அழைக்கப்படுகிறது.*

🌠🌠🌠🌠🌠🌠🌠🌠🌠



🌠🌠🌠🌠🌠🌠🌠🌠🌠

No comments:

Powered by Blogger.