Breaking

மார்ச்-07. 🎥 ஒளிப்படவியல் முன்னோடியாகக் கருதப்படும் பிரான்ஸ் கண்டுபிடிப்பாளர்-* ஜோசப் நீசஃபர் நியெப்ஸ் (Joseph Nicephore Niepce) *பிறந்த தினம்.





🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥

*இன்று பிறந்த நாள்: மார்ச்-07.

🎥 ஒளிப்படவியல் முன்னோடியாகக் கருதப்படும் பிரான்ஸ் கண்டுபிடிப்பாளர்-* ஜோசப் நீசஃபர் நியெப்ஸ் (Joseph Nicephore Niepce) *பிறந்த தினம்.
--------------------

🎥 *பிரான்ஸின் சாலோன் சர் சயோனே என்ற நகரில் (1765) பிறந்தார்.*

🎥 *அறிவியலில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். பள்ளிப் படிப்பை முடித்ததும், கத்தோலிக்க மதபோதகர் பணிக்காக கல்வி பயின்றார். சில காலம் பாதிரியாராகப் பணியாற்றினார்.*

 🎥 *ராணுவத்தில் இணைந்தார். உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அங்கிருந்து வெளி யேற்றப்பட்டு, மீண்டும் சொந்த ஊரில் குடியேறினார்.*

🎥 *ஒரு கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். பிரான்ஸின் நைஸ் மாவட்ட நிர்வாகியாகவும் செயல்பட்டார்.*

🎥 *ஆராய்ச்சிகள் மீதான ஆர்வத்தால், வேலையை ராஜினாமா செய்தார்.*

🎥 *தொடர்ச்சியாக ஒரே விஷயத்தில் கவனம் செலுத்தும் வழக்கம் இவருக்கு கிடையாது. புதிது புதிதாக எதையாவது செய்துகொண்டே இருப்பார்.*

🎥 *சகோதரருடன் இணைந்து, உள்ளே* எரிகிற இன்ஜினை *உருவாக்கினார்.* பெரிய படகுகளுக்கான மோட்டாரை *உருவாக்கினார். தனது* முதல் கேமராவையும் *வடிவமைத்தார்.*

🎥 *சகோதரர் லண்டன் சென்றுவிட, இவர் மட்டும் உள்ளூரில் தங்கினார். அப்போது, பிரான்ஸில் பலருக்கும் பொழுதுபோக்காக மாறிய* லித்தோகிராபியில் (கல் அச்சுக் கலை) *ஆர்வம் கொண்டார்.*

🎥 *நவீன முறையாக கருதப்பட்ட அச்சுத் தொழில்நுட்பம் தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்.*

🎥 *படம் வரையும் திறமை இல்லாததாலும், கைநடுக்கம் இருந்ததாலும் மகனிடம் படங்கள் வரைந்து கொடுக்கச் சொன்னார்.*

🎥 *அவற்றை ஒரு ப்ளேட்டில் வைத்து அதில்* காரீயத்துடன் *பல்வேறு* ஒளி உணர் ரசாயனக் *கலவையைப் பூசினார். இம்முறையில், அதிக நேரம் நீடித்திருக்கும் ஒளிப் படங்களை உருவாக்கினார்.*

🎥 *மகனுக்கு ராணுவப் பணிக்கான அழைப்பு வந்ததால் படம் வரைவதற்கு பதிலாக, இயற்கையில் இருந்தே நேரடியாக பிம்பங்களைப் பெறுவதற்கான வழிமுறைகளைக் கண்டறியும் முயற்சியில் இறங்கினார்.*

🎥 *இதற்காக* வெள்ளி குளோரைட், நிலக்கீல் (Asphalt) *ஆகியவற்றைப் பயன்படுத்தினார். இத்தகைய பிம்பங்களை* ‘ஹீலியோகிராபி’ *என்று குறிப்பிட்டார். இவை குறுகிய காலமே நீடித்தன.*

🎥 *பல ஆண்டு ஆராய்ச்சிக்குப் பிறகு, நிலைத்திருக்கக்கூடிய ஒரு ஓவியத்தை 1824-ல் படமெடுத்தார்.* 

🎥 கேமரா கரும்பெட்டியை (Camera Obscura) *பயன்படுத்தி, நிரந்தரமாக நீடித்திருக்கும் ஒரு புகைப்படத்தை 1826-ல் முதன்முதலாக எடுத்தார். அதுதான் உலகின்* முதல் நீடித்து நிற்கும் புகைப்படமாகக் *கருதப்படுகிறது. இதை அரசுக்கு விற்றார்.*



🎥 *அதற்காக, பிரான்ஸ் அரசு இவருக்கு 6,000 பிராங்க்குகளை இறக்கும் வரை வழங்கியது. இவர் இறந்த பிறகு, இவரது வாரிசுகளுக்கு 4,000 பிராங்க்குகளை வழங்கியது.*

🎥 *மனநிலை பாதிக்கப்பட்ட அண்ணன் மேற்கொண்ட ஆராய்ச்சிகளுக்காக குடும்பச் சொத்து முழுவதும் பறிபோனது. ஆனாலும் ஆராய்ச்சி முனைப்புகளை இவர் கைவிடவில்லை.*

🎥 *இதுபோன்ற ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வந்த* லூயில் டாகுவேரெ *என்பவருடன் இணைந்து, கூட்டாகப் புகைப்படம் எடுக்கும் வழிமுறை களை மேம்படுத்தினார்.*

🎥 *பிற்கால அறிஞர்கள் இவரது பங்களிப்பு களை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தனர். 1825-ல் இவர் எடுத்ததாக கருதப்பட்ட முதல் புகைப்படம் 2002-ல் தேடிக் கண்டறியப்பட்டது.*

🎥 *அந்த புகைப்படம் ஏலம் விடப்பட்டு 4.50 லட்சம் யூரோவுக்கு விற்பனையானது. புகைப்படம் எடுக்கும் நுட்பத்தைக் கண்டறிந்தவர்களில் முதன்மையானவராகப் போற்றப்படும் ஜோசப் நீசஃபர் நியெப்ஸ் 68-வது வயதில் (1833) மறைந்தார்.*

🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥


🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥

No comments:

Powered by Blogger.