Breaking

மார்ச்-11. பெனிசிலியம் நொட்டேடம் என்ற பூஞ்சையிலிருந்து பெனிசிலின் மருந்து பிரித்தெடுத்தவர் ஸ்காட்லாந்து நுண்ணுயிரியலாளர் -சர் அலெக்ஸாண்டர் ஃபிளெமிங் (Sir Alexander Fleming) மறைந்த தினம்.


இன்று நினைவு நாள்:-மார்ச்-11.


பெனிசிலியம் நொட்டேடம் என்ற 
பூஞ்சையிலிருந்து
பெனிசிலின் மருந்து
பிரித்தெடுத்தவர்
ஸ்காட்லாந்து நுண்ணுயிரியலாளர்
-சர் அலெக்ஸாண்டர் ஃபிளெமிங் (Sir Alexander Fleming) மறைந்த தினம்.


பிறப்பு:-


1881 ஆம் ஆண்டு ஆகஸ்ட் -06 ஆம் தேதி, டார்வேல்,
கிழக்கு அயர்ஷயர், ஸ்காட்லாந்தில் பிறந்தார்.

லுடுன் மூர் பள்ளி மற்றும் டார்வெல் பள்ளிக்கு சென்றும், லண்டனுக்கு செல்வதற்கு முன் கில்மோர்னாக் அகாடமி இரண்டு வருட உதவித்தொகை பெற்று, ராயல் பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூஷனில் கல்வி பயின்றார்.

நான்கு ஆண்டுகளுக்கு கப்பல் அலுவலகத்தில் வேலை செய்தார்.

1903 ஆம் ஆண்டில்  பாடிங்டனில் உள்ள செயின்ட் மேரி மருத்துவமனை மருத்துவமனையில் சேர்ந்தார்.1906 ஆம் ஆண்டில் MBBS பட்டம் பெற்றார். 


1908 இல், பாக்டீரியலஜி துறையில் தங்க பதக்கத்துடன் BSc பட்டம் பெற்றார்.

பணிகள்:-

1914 வரை செயிண்ட் மேரியின் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றினார்.

நோய்க்கிருமிகளுக்கு எதிரான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த ஆல்ம்நாத் ரைட் என்பவரிடம் உதவியாளராகச் சேர்ந்தார். 


ஆராய்ச்சிகள்:-

ஜெர்மன் விஞ்ஞானி பால் என்ரிக் என்பவர் ‘சிஃபிலிஸ்’ என்ற கொடிய பால்வினை நோய்க்கு ‘ஸல்வார்ஸன்’ என்ற மருந்தைக் கண்டுபிடித்திருந்தார். ரத்தத்தைப் பரிசோதித்து அந்த நோயை எளிதில் கண்டறியும் ஒரு மேம்பட்ட முறையை ஃப்ளெமிங் அறிமுகப்படுத்தினார்.

நான்கு ஆண்டுகள் நடந்த முதல் உலகப்போரில்  ஆயிரக்கணக்கானோர் டைஃபாய்டு காய்ச்சல் பாதித்த வீரர்களுக்கு 

கார்பாலிக் அமிலம், போரிக் அமிலம், ஹைட்ரஜன் பெராக்ஸைட் மருந்துகளை பயன்படுத்தியதால் இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை அழித்து  பலர் இறப்பதை கண்டறிந்தும்,
பல்வேறு வகை நுண்ணுயிர்களை தட்டுகளில் வளர்த்து அவற்றின் இயக்கங்களை அவர் ஆராயத் தொடங்கினார். தனது மூக்கிலிருந்து ஒழுகிய நீரிலிருந்தே ஓரிரு சொட்டுகள் எடுத்து பாக்டீரியாக்கள் அடங்கிய தட்டில் வைத்து வளர்த்தபோது, சளித்திரவத்தைச் சுற்றியிருந்த பாக்டீரியாக்கள் மட்டும் அழிக்கப்பட்டிருந்ததைப் பார்த்தார். இதேபோல் கண்ணீர், உமிழ் நீர், சீழ் போன்ற உடலில் சுரக்கும் பல திரவங்களை எடுத்து ஆராய்ச்சிக்கு உட்படுத்தினார். இந்த திரவங்கள் அனைத்திற்கும் நோய்க்கிருமிகளை வளராது தடுக்கும் ஆற்றல் இருப்பதைக் கண்டார். இயற்கையிலேயே அமைந்த இந்த நச்சு முறிபொருளுக்கு ‘லைசோசைம்’ எனப் பெயரிட்டார்.

பெனிசிலின் கண்டுபிடிப்பு:-


1928 ஆம் ஆண்டில் நுண்ணுயிர்கள் வளர்க்கப்பட்ட ஒரு தட்டை நோக்கிய போது, லைசோசைம் செய்யாத  செயலை காளான் செய்திருந்ததைத் தற்செயலாகக் கண்டார். கொப்புளங்கள், கட்டிகள், மூக்கு, தொண்டை, தோல் இவற்றில் ஏற்படும் தொற்று நோய்களை வரவழைக்கும் 

"ஸ்டாபைலொகாக்கி" எனப்படும் கிருமிகளை காளான் அழித்திருந்தது. ஆனால் அந்தக் காளானின்  வெள்ளை அணுக்களை அழிக்கவில்லை, வேறு திசுக்களைப் பாதிக்கவில்லை என்று தெரிந்து கொண்டார். காளானில் பரவிய அப்பொருளுக்கு ‘பெனிசிலின்’ எனப் பெயரிட்டார்.


பாராட்டுக்களும் விருதுகளும்:-


1945 ஆம் ஆண்டில், இவருக்கும், ஹோவர்டு ஃப்ளோரே, எர்னஸ்ட் செயின் ஆகிய மூவருக்கும் மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

1944 ஆம் ஆண்டில் நைட் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

1999 ஆம் ஆண்டில் டைம் சஞ்சிகையால் வெளியிட்ட 20 ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான 100 நபர்களின் பட்டியலில் இடம் பெற்றார்.


மறைவு:-


ஒரு நுண்ணுயிரை வைத்து இன்னொன்றைக் கொல்லமுடிகின்ற பெனிஸிலின் என்ற நச்சுமுறி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் பல நோய்களிலிருந்து மனிதர்களைக் காப்பாற்றிய பெருமைக்குரிய விஞ்ஞானியான இவர்,
மார்ச்-11, 1955 ஆம் ஆண்டு, தனது  73 வது வயதில் லண்டன், இங்கிலாந்தில் மரணமடைந்தார்.

No comments:

Powered by Blogger.