Breaking

மார்ச்-11. நெப்டியூன் இருப்பிடத்தையும் கணிதமுறையால் கண்டுபிடித்த பிரான்ஸ் கணிதவியலாளர்- உர்பைன் ஜீன் ஜோசப் லெவெரியே (Urbain Jean Joseph Le Verrier) பிறந்த தினம்.





இன்று பிறந்த நாள்:- மார்ச்-11.


நெப்டியூன் இருப்பிடத்தையும் கணிதமுறையால் கண்டுபிடித்த பிரான்ஸ் கணிதவியலாளர்-
உர்பைன் ஜீன் ஜோசப் லெவெரியே (Urbain Jean Joseph Le Verrier) பிறந்த தினம்.


பிறப்பு:-


மார்ச்-11, 1811 ஆம் ஆண்டு புனித-லோ ,பிரான்சில் பிறந்தார். தனது ஆரம்பகல்வி பயின்று முடித்த பிறகு,ஏகாலே பாலிடெக்னிக்கில்
பயின்று முடித்தார். பிறகு கய்-லுசாக் என்பவரின் கீழ் வேதியியல் பாடம் பயின்றார்.  பாஸ்பரஸ் மற்றும் ஹைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் ஆக்ஸிஜன் ஆகியவற்றின் கலவையை பற்றியும் எழுதியுள்ளார்.



கண்டுபிடிப்புகள்:-


இவர் வான்கோள இயக்கவியலில் சிறப்புப் புலமை பெற்றார்.
இவர் நெப்டியூனின் நிலவலையும் அதன் இருப்பிடத்தையும் கணித முறையில் செப்டம்பர் 23-24 அன்று இரவு, 1846, ஆம் ஆண்டு
கண்டுபிடித்துப் பெயர் பெற்றவர்.



விருதுகள்:-


1846 ஆம் ஆண்டில், லு வெரியர் பிரஞ்சு அகாடமி ஆஃப் சயின்சஸ் உறுப்பினராக ஆனார். 

1855 ஆம் ஆண்டில், அவர் ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சின் வெளிநாட்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அரசு வானியல் கழகப் பொற்பதக்கம் – 1868 போன்ற விருதுகளை பெற்றார்.

இறப்பு:-


செப்டம்பர்-23, 1877 ஆம் ஆண்டு
பாரீசு, பிரான்சில் மரணமடைந்தார்.


சிறப்புகள்:-

நிலாவிலும் செவ்வாயிலும் உள்ள 
லெவெரியே குழிப்பள்ளங்களும் நெப்டியூனின் வலயமும் குறுங்கோள் 1997 
லெவெரியேவும் இவரது நினைவாகப் பெயர் இடப்பட்டுள்ளன.


ஈஃபில் கோபுரத்தில் பொறிக்கப்பட்ட 72 பேரில் இவரும் ஒருவர் ஆவார்.

No comments:

Powered by Blogger.