Breaking

மார்ச்-13. நைட்ரஜன், ஹைட்ரஜன் குளோரைடு, கார்பன் மோனாக்சைடு போன்ற வாயுக்களைக் கண்டறிந்த இங்கிலாந்து வேதியியலாளர்- ஜோசப் பிரீஸ்லே (Joseph Priestley) பிறந்த தினம்.






இன்று பிறந்த நாள்:- மார்ச்-13.


நைட்ரஜன், ஹைட்ரஜன் குளோரைடு, கார்பன் மோனாக்சைடு போன்ற  வாயுக்களைக் கண்டறிந்த இங்கிலாந்து வேதியியலாளர்- ஜோசப் பிரீஸ்லே (Joseph Priestley) பிறந்த தினம்.

பிறப்பு:-

இங்கிலாந்தின் பிர்ஸ்டல் நகரில், மார்ச்-13,1733 ஆம் ஆண்டு பிறந்தார். தாய் வழி தாத்தா, பாட்டியிடம் வளர்ந்தார். அறிவுக்கூர்மை மிக்க இவர் கணிதம், தர்க்கவியல், இயற்கை தத்துவம் ஆகியவற்றை கற்றார். பேச்சுத் திறன் குறைபாடு உடையவராக இருந்தார். பிறகு நான்ட்விச் நகரில் ஒரு பள்ளியைத் தொடங்கினார். லத்தீன், ஹீப்ரு, கிரேக்கம் உள்ளிட்ட மொழிகளைக் கற்றார். 

பணிகள்:-

வாரிங்டன் அகாடமியில் மொழி ஆசிரியராகப் பணியாற்றினார். மொழிகள், நவீன வரலாறு, சட்டம், உடற்கூறியல் உள்ளிட்ட அனைத்து பாடங்களையும் கற்பித்தார்.
இறையியல், வரலாறு, கல்வி, தத்துவம், மொழிகள், அழகியல், அரசியல் குறித்தும் ஏராளமான புத்தகங்கள், குறிப்புகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். கல்வித் துறையில் இவரது பங்களிப்பை அங்கீகரித்து எடின்பர்க் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது.




ஆராய்ச்சிகள்:-

எடின்பர்க் பல்கலைக்கழகத்தில்
இவரது அறிவியல் ஆராய்ச்சிகளும் தொடங்கின.
வாயுக்கள், மின்சாரம் குறித்த ஆராய்ச்சியில் முக்கியப் பங்காற்றினார். கார்பன் டை ஆக்சைடு பற்றிய இவரது ஆய்வுகள் புகழ்பெற்றவை. 
வாயுக்களை பரிசோதித்து பல்வேறு வகையான வாயுக்களைப் பிரித்து எடுத்தார். நைட்ரஜன், ஹைட்ரஜன் குளோரைடு, கார்பன் மோனாக்சைடு, நைட்ரஸ் ஆக்சைடு உள்ளிட்ட 10 வாயுக்களைக் கண்டறிந்தார்.
பிறகு சோடாவையும் கண்டறிந்தார். வாயுக்கள் தொடர்பான தனது கண்டுபிடிப்புகள் பற்றிய விவரங்களை 1775 ஆம் ஆண்டு ‘ஆன் அக்கவுன்ட் ஆஃப் ஃபர்தர் டிஸ்கவரீஸ் இன் ஏர்’ என்ற கட்டுரையில் வெளியிட்டார். தனிமங்கள், அமிலங்கள், ஒளிச்சேர்க்கை குறித்தும் ஆராய்சிகள் மேற்கொண்டார். சுவாச செயல்பாட்டில் ரத்தத்தின் பங்கை வரையறுத்தார். வாயு வேதியியலின் சோதனை நுட்பங்களை கண்டறிந்தார்.



நூல்கள்:-

1761-தி ருடிமென்ட்ஸ் ஆஃப் இங்கிலீஷ் கிராமர்,  
1788-‘எ கோர்ஸ் ஆஃப் லெக்சர்ஸ் ஆன் தி தியரி ஆஃப் லாங்வேஜஸ்‘ ஆகிய 2 நூல்களை எழுதினார். இவை ஆங்கிலம் கற்பிப்பதற்கான வழிகாட்டி நூல்களாகக் கருதப்பட்டன.
நண்பர்களின் ஆலோசனையுடன் ‘ஹிஸ்டரி ஆஃப் எலெக்ட்ரிசிட்டி’ என்ற நூலை எழுதினார். பின்னர் ‘ஹிஸ்டரி ஆஃப் ஆப்டிக்ஸ்’ என்ற நூலை வெளியிட்டார்.

விருதுகள்:-

பாஸ்டன், பிலெடல்பியா, ஸ்டாக்ஹோம், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஆகிய இடங்களில் உள்ள அறிவியல் அமைப்புகளின் கவுரவ உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 



மறைவு:-

தாராளமய அரசியல் கருத்தியல்வாதியாகவும் முத்திரை பதித்த இவர்,
பிப்ரவரி-06, 1804 ஆம் ஆண்டு அமெரிக்காவில் மரணமடைந்தார்.

No comments:

Powered by Blogger.