Breaking

மார்ச் 19. 🌩 *அறிவியல் அறிஞரும் வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றவருமான-* மரியோ ஜோஸ் மோலினா (Mario Jose Molina) *பிறந்த தினம்.*





இன்று பிறந்த நாள்:-மார்ச் 19.

🌩 *அறிவியல் அறிஞரும் வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றவருமான-* மரியோ ஜோஸ் மோலினா (Mario Jose Molina) *பிறந்த தினம்.*
🌩🌩🌩🌩🌩🌩🌩🌩🌩

 🌩 *மெக்சிகோவில் பிறந்தவர் (1943). தந்தை நீதிபதி. சிறுவயதில் தன்னிடம் இருந்த பொம்மை நுண்ணோக்கிகள் மற்றும் வேதியி யல் சாதனங்களைக் கொண்டு பல்வேறு அறிவியல் புத்தகங்களில் தான் படிப்பதை உடனடி யாக பரிசோதனை செய்து பார்த்துவிடுவார்.*

🌩 *பள்ளிப் படிப்பை முடித்தபின், 1965ல் மெக்சிகோ நேஷனல் அடானமஸ் பல்கலைக் கழகத்தில் ரசாயனப் பொறியியலில் பட்டம் பெற்றார்.*

🌩 *மேற்கு ஜெர்மனியில் ஃப்ரிபர்க் பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டமும் பின்னர் பெர்கேலியில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் வேதியியலில் முனைவர் பட்டமும் பெற்றார்.*

🌩 *உயர் ஆற்றல் வாய்ந்த ரசாயன லேசர்கள் உள்ளிட்ட பல அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிகள், அழிவு நோக்கங்களுக்குப் பயன்படுவதைக் கண்டு வேதனையடைந்தார்.*

🌩 *வானியல் ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட இவர், அப்போது பல பிரபல அறிவியல் இதழ்களில் கட்டுரைகள் எழுதினார்.*

🌩 *1973-ல் பேராசிரியரும் ஆராய்ச்சியாளருமான* ஷெர்வுட் ரோலன்டின் *சோதனைக்கூடத்தில் பணியாற்றத் தொடங்கினார்.*

🌩 *மனிதனால் உருவாக்கப்படும்* கரிமச் சேர்ம வளிமங்கள், சூரியக் கதிர்வீச்சுடன் *இணைந்து, அடுக்கு வளிமண்டலத்தில் சிதைவடைவதால் வெளிப்படும்* குளோரின் அணுக்கள், ஓசோன் மூலக்கூறுகளை *அழிக்கக் கூடியவை என்பதைக் கண்டறிந்தனர்.*

🌩 *இந்த ஆராய்ச்சி, வளிமண்டலத்தில்* குளோரோஃப்ளுரோகார்பன் (Chloro Fluoro Carbon - CFCs) *மிக அதிகமாகப் படர்வது குறித்த ஆராய்ச்சிக்கு வழிவகுத்தது.*
🌩 *குளோரோ ஃப்ளுரோ கார்பன் *வாயுக் களால்* ஓசோன் படலத்துக்கு *ஏற்படும் பாதிப்பையும் அதனால் உண்டாகும்* ஓசோன் துளையினால் பூமிக்கு ஏற்படும் ஆபத்து *குறித்தும் விளக்கினார்.*

🌩 *இதன் பிறகு அட்லான்டிக் நகரில் கூடிய அமெரிக்க வேதியியல் கழகம்* சி.எஃப்.சி.க்களை வளிமண்டலத்தில் *வெளியிடுவதற்கு முழுமையான தடை விதித்தது.*

🌩 *மேலும் உலகளாவிய அளவில்* ஏரோசால் கேன்கள் *மற்றும்* குளிர்சாதன பெட்டிகளிலிருந்து *இந்த* சி.எஃப்.சி.க்களை *அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.*



🌩 *ஓசோன் படலத்தினால் பூமிக்கு ஏற்படும் ஆபத்தைக் குறித்து விளக்கியதற்காக* ஷெர்வுட் ரோலன்ட் *மற்றும்* டச்சு நாட்டைச் சேர்ந்த அறி வியலாளர்- பால் ஜே. க்ரூட்சன் *ஆகியோருக்கும் இவருக்கும் கூட்டாக 1995ம் ஆண்டில் வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.*

🌩 *1974 முதல் 2004 வரையிலான காலகட்டத்தில் கலிஃபோர்னியா பல்கலைக்கழகம், ஜெட் புரோபுல்சன் சோதனைக்கூடம், கால்டெக், மசாசூசெட்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி (எம்.ஐ.டி.) உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பேராசிரியராகவும் ஆராய்ச்சியாளராகவும் பணியாற்றினார்.*

🌩 *அன்டார்டிக் ஓசோன் துளையைக் கண்டுபிடித்த முன்னோடிகளில் ஒருவர் என்ற பெருமை பெற்றார். மெக்சிகோ ஜனாதிபதியின் காலநிலை கொள்கை ஆலோசகர், அமெரிக்க அதிபரின் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப ஆலோசனைக் கமிட்டி, அறிவியல் சேவைகள் அமைப்பின் அறங்காவலர் குழுவிலும் முக்கிய பதவிகளில் செயல்பட்டார்.*

🌩 *உலகம் முழுவதும் உள்ள 30-க்கும் மேற்பட்ட தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார்.*

🌩 சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கான நிலைமாற்ற அணியில் (transition team on environmental issues) *முக்கிய பங்காற்றினார்.*

🌩 வானியல் *மற்றும்* சுற்றுச்சூழல் ரசாயனத் *துறையில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்கினார்




No comments:

Powered by Blogger.