Home
MARCH
மார்ச்-19.* 🐞 *பூச்சியியல் வல்லுநரும், ஆராய்ச்சியாளருமான-* வில்லியம் மார்ட்டன் வீலர் (William Morton Wheeler) *பிறந்த தினம்.*
மார்ச்-19.* 🐞 *பூச்சியியல் வல்லுநரும், ஆராய்ச்சியாளருமான-* வில்லியம் மார்ட்டன் வீலர் (William Morton Wheeler) *பிறந்த தினம்.*
10:30
Read
🐞🐞🐞🐞🐞🐞🐞🐞🐞
*இன்று பிறந்த நாள்:- மார்ச்-19.*
🐞 *பூச்சியியல் வல்லுநரும், ஆராய்ச்சியாளருமான-* வில்லியம் மார்ட்டன் வீலர் (William Morton Wheeler) *பிறந்த தினம்.*
🐞🐞🐞🐞🐞🐞🐞🐞🐞
🐞 *அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் உள்ள மில்வாக்கி நகரில் (1865) பிறந்தார்.*
🐞 *சிறு வயதில் துறுதுறுவென இருப்பார். அடங்காத மாணவன் என்று கூறப்பட்டு, அரசுப் பள்ளியில் இருந்து ஜெர்மன்-இங்கிலீஷ் அகாடமி பள்ளிக்கு மாற்றப்பட்டார்.*
🐞 *புதிய பள்ளியில் இருந்த அருங் காட்சியகம் மிகவும் பிடித்துப்போன தால், நீண்ட நேரம் அங்கேயே இருப்பார்.*
🐞 *பாடம் செய்யப்பட்ட விலங்குகளின் எலும்புக்கூடுகளை வைப்பதற்காக* ‘வார்ட்ஸ்’ *நிறுவனத்தை சேர்ந்தவர்கள் அங்கு வந்தனர்.*
🐞 *மாதிரிகளை வகைப்படுத்தி ஒழுங்குபடுத்த அவர்களுக்கு உதவி செய்தார். படிப்பை முடித்த பிறகு, நியூயார்க்கில் உள்ள அவர்களது நிறுவனத் திலேயே உதவியாளராக வேலை கிடைத்தது.*
🐞 *அங்கு பணியாற்றிய போது* பறவைகள், பாலூட்டிகள் *பலவற்றை அடையாளம் கண்டார்.*
🐞 *தான் பயின்ற பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். ஆய்வுக்கூடத்தில் ஆராய்ச்சியாளராக 5 ஆண்டுகள் வேலை செய்தார்.*
🐞 *சொந்த ஊரில் இருந்த அருங்காட்சியகத்தில் இயக்குநராக 4 ஆண்டுகள் பணியாற்றினார்.* ‘உட்ஸ் ஹோல்’ *சோதனைக் கூடத்தில் பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வந்தார்.*
🐞 *கிளார்க் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணியாற்றினார். மூனிச், நேபல்ஸ், லீக் ஆகிய இடங்களிலும் ஆராய்ச்சிகள் மேற்கொண்டார்.*
🐞 *டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறைத் தலைவராகப் பணியாற்றினார்.*
🐞 *விலங்குகளின் பண்புகள் பற்றிய துறையைக் குறிக்கும்* ‘ஈத்தாலஜி’ (Ethology) *என்ற சொல்லை ஒரு கட்டுரையில் பிரபலப்படுத்தினார்.*
🐚 கிளிஞ்சல்கள், கடற்பாசிகள் *உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களை சேகரித்து வகைப்படுத்தினார். டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபோது,* எறும்புகள் *குறித்த ஆராய்ச்சியைத் தொடங்கினார்.*
🐜 *கொடிய நச்சுத்தன்மை வாய்ந்த* ‘மரிகோபா’ *எறும்பு உட்பட பல பூச்சி இனங்களை வகைப்படுத்தியுள்ளார்.*
🐞 *நியூயார்க்கில் உள்ள அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சி யக காப்பாளராக நியமிக்கப்பட்ட பிறகு, ஆராய்ச்சிகளில் மேலும் தீவிரமாக ஈடுபட்டார்.*
🐞 *அமெரிக்க தேசிய அறிவியல் கழக உறுப்பி னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.*
🐞 *ஹார்வர்டு பல்கலைக்கழகப் பேராசிரி யராகப் பணியாற்றியபோதும் பல ஆய்வுகளை மேற்கொண்டார்.*
🐜 *எறும்புகளின் வகைப்பாடு, அமைப்பியல், சூழலியல், அவற்றின் பழக்க வழக்கங்கள், சமூக குணங்கள் ஆகியவை தொடர்பாகவே இவரது பெரும்பாலான ஆய்வுகள் இருந்தன.*
🐜 *எறும்புகளின் சமூக நடத்தை பூச்சியியல் உலகிலேயே மிகவும் சிக்கலானது என்று கண்டறிந்தார்.*
🐜 *உலகின் பல பகுதிகளில் இருந்தும் திரட்டப்பட்ட மாதிரிகளைக் கொண்டு இவரது கண்டுபிடிப்புகள் அமைந்தன.*
🐜 *சிங்க எறும்பு (Antlion), பறக்கும் பூச்சியினங்களின் லார்வா ஆகியவற்றில் உயிரியியல் அடிப்படையிலான முக்கிய ஆய்வுகளை நிகழ்த்தினார்.*
🐜 *எறும்புகள், பூச்சிகளின் பழக்க வழக்கங்கள், சமூக குணங்கள் குறித்து இவர் எழுதிய நூல்கள் உலகப் புகழ்பெற்றன.*
🐜 *400-க்கும் மேற்பட்ட ஆய்வு படைப்புகளை வெளியிட்டுள்ளார்.*
🐜 *அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமியின்* ‘டேனியல் ஜீரோ எலியட்’ *பதக்கம் உட்பட பல விருதுகள் பெற்றுள்ளார்.*
🐜 *சிறந்த ஆசிரியர், எழுத்தாளர், பூச்சியியல் வல்லுநர், ஆராய்ச்சியாளர் என பன்முகத்திறன் கொண்ட வில்லியம் மார்ட்டன் வீலர் 72வது வயதில் (1937) மறைந்தார்.*
🐞🐞🐞🐞🐞🐞🐞🐞🐞
🐞🐞🐞🐞🐞🐞🐞🐞🐞
மார்ச்-19.* 🐞 *பூச்சியியல் வல்லுநரும், ஆராய்ச்சியாளருமான-* வில்லியம் மார்ட்டன் வீலர் (William Morton Wheeler) *பிறந்த தினம்.*
Reviewed by JAYASEELAN.K
on
10:30
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
10:30
Rating: 5


No comments: