Breaking

மார்ச்-20. விமானத்தின் தகவல் பரிமாற்றத்தினை பதிவு செய்யும் விமானதரவு பதிவி மற்றும் விமானியறை குரல் பதிவி (விமான கருப்பு பெட்டி-The black box) கண்டுபிடித்த ஆஸ்திரேலிய அறிவியலாளர்- டேவிட் ரொனால்ட் டி மே வாரன் (David Ronald de Mey Warren) பிறந்த தினம்.





இன்று பிறந்த நாள்:- மார்ச்-20.


விமானத்தின் தகவல் பரிமாற்றத்தினை பதிவு செய்யும் 
விமானதரவு பதிவி
மற்றும் விமானியறை குரல் பதிவி 
(விமான  கருப்பு பெட்டி-The black box)
கண்டுபிடித்த ஆஸ்திரேலிய அறிவியலாளர்-
டேவிட் ரொனால்ட் டி மே வாரன் (David Ronald de Mey Warren) பிறந்த தினம்.


பிறப்பு:-

ஆஸ்திரேலியாவின்வடக்கே, குரூட் ஐனட் என்ற தீவில் மார்ச்-20, 1925  ஆம் ஆண்டில் பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை 
தாஸ்மானியாவிலும், பின்னர் சிட்னி 
டிரினிட்டி கிரம்மர் பள்ளியிலும் பயின்றார். பிறகு சிட்னிப் பல்கலைக்கழகத்தில் பயின்று அறிவியல் பட்டதாரி ஆனார்.

பணிகள்:-

1944-46, கணிதவியல் மற்றும் வேதியியல் ஆசிரியர், வில்லியம் கிராமர் பள்ளி, விக்டோரியா.
1947-48,சிட்னி பல்கலைக்கழகத்தில் வேதியியல் நிபுணர்.
1948-51,அறிவியல் அதிகாரி, வூமீரா ராக்கெட் ரேஞ்ச் மற்றும் இம்பீரியல் கல்லூரி, லண்டன்.
1952-83  முதன்மை ஆராய்ச்சி விஞ்ஞானி, ஏரோனாட்டிகல் ஆராய்ச்சி ஆய்வகங்கள், மெல்போர்ன், ( அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைப்பின் பகுதி).
1981-82  விக்டோரியா மாநில பாராளுமன்றத்திற்கு அறிவியல் ஆலோசகர் (எரிசக்தி) போன்ற பணிகளை மேற்கொண்டார்.



ஆய்வுகள்:-

1953 இல் "கொமெட்" என்ற உலகின் முதலாவது பயணிகள் ஜெட் விமானத்தின் விபத்துக் குறித்து விசாரணை நடத்த ஆரம்பித்தபோது அவர் விமானத் தரவுப் பதிவு செய்யும் கருவியைப் பற்றிய ஆய்வுகளை ஆரம்பித்தார். 
விமான விபத்துகளுக்கான காரணங்களைக் கண்டறிய இது மிகவும் உதவியாக இருக்கும் என அவர் நம்பினார்.
விமானத்தின் முன்பகுதியில் அமர்ந்திருக்கும் விமானிகளின் உரையாடலை ஒலிப்பதிவு செய்தால் மட்டுமே விபத்துக்கான காரணத்தை கண்டறிய முடியும் என உணர்ந்து இதனைக் கண்டுபிடித்தார். 
1960 ஆம் ஆண்டுக்கு பின்னரே இதன் முக்கியத்துவம் உணரப்பட்டு, அனைத்து விமானங்களுக்கும் 'கறுப்புப் பெட்டி'
(Cockpit Voice Recorder, The Black Box) பொருத்தப்பட்டது.


விருதுகள்:-


FAIE -ஆஸ்திரேலிய
ஆற்றல் நிறுவனத்தின்  எரிசக்தி பதக்கம்- (1999),
ராயல் சொசைட்டி ஆஃப் தி ஆர்ட்ஸ்- (2000) இன் ஹார்ட்நெட் மெடல்,
சென்டெனரி மெடல்- (2001),
ராயல் ஏரோனாட்டிகல் சொசைட்டி லாரன்ஸ் ஹர்க்வேவ் விருது-(2001),
ஆபிசார் ஆஃப் தி ஆர்டர் ஆப் ஆஸ்ட்ரேலியா (AO) -(2002),
ICAO எட்வர்ட் வார்னர் விருது- (2016) போன்ற விருதுகளை பெற்றார்.


இறப்பு:-


ஜூலை-19,  2010 ஆம் ஆண்டு, தனது 85 வது வயதில் மெல்போர்ன், ஆஸ்திரேலியாவில் மரணமடைந்தார்.

No comments:

Powered by Blogger.