Breaking

மார்ச்-21. ராபர்ட் எட்வர்ட்ஸ் உடன், மனித முட்டையின் உள்-செயற்கை கருத்தரிப்பை நிறைவு செய்த பிரிட்டிஷ் விஞ்ஞானி- பேட்ரிக் கிறிஸ்டோபர் ஸ்டெப்டே (Patrick Christopher Steptoe) மறைந்த தினம்.





இன்று நினைவு நாள்:- மார்ச்-21.





ராபர்ட் எட்வர்ட்ஸ் உடன், மனித முட்டையின் உள்-செயற்கை கருத்தரிப்பை நிறைவு செய்த பிரிட்டிஷ் விஞ்ஞானி-
பேட்ரிக் கிறிஸ்டோபர் ஸ்டெப்டே 
(Patrick Christopher Steptoe) மறைந்த தினம்.

பிறப்பு:-

ஜூன்-09, 1913 ஆம் ஆண்டு,
ஆக்ஸ்ஃபோர்ட், இங்கிலாந்தில் பிறந்தார்.
தனது ஆரம்பக்கல்வியை தி கிராமர் ஸ்கூலில் படித்தார். பிறகு லண்டனின் கிங்ஸ் கல்லூரிக்கு பயிண்றார். மேலும் இலண்டன் செயிண்ட் ஜார்ஜ் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் 1939 ஆம் ஆண்டு பட்டம் பெற்றார்.

பணிகள்:-

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, அவர் மகப்பேறியல் பயின்றார். 1951 ஆம் ஆண்டில் அவர் ஓல்ட்ஹாம் பொது மருத்துவமனையில் பணிபுரியத் தொடங்கினார். ராவுல் பால்மரில் இருந்து அவர் லாபரோஸ்கோப்பின் நுட்பத்தை கற்ரம் அதன் பயனை ஊக்குவித்தார்.

ஆய்வுகள்:-




பெண்களின் கருப்பையில் ஏற்படும் தொற்று நோய்களை கண்டறிதலுக்கான லேபராஸ்கோபியை பிரிட்டனில் முதன்முதலாக பயன்படுத்தினார்.
மேலும்  கருத்தரித்தல் ஒரு நிலையான நுட்பமாக பயன்படுத்தினார். அவர் கருவுறாமைக்கான சிகிச்சைக்காக தீர்வுகான  முயன்றார். 
1969 ல் ஓல்ட்ஹாம் மனித இனபெருக்க மையத்தின் இயக்குனரானார். அப்போது  லாபரோஸ்கோப்பியைப் பயன்படுத்தி, மலட்டு தன்மை உள்ள பெண்களின் கறுப்பையில் உள்ள முட்டை எடுத்து, அவர்கள் கர்ப்பத்தை அடைய முயன்றார்.
பிறகு, 100 க்கும் மேற்பட்ட முயற்சிகளுக்குப் பிறகு கர்ப்பம் பெற்றது. பிறகு அவர் பயன்படுத்திய நுட்பம் மிகவும் வெற்றிகரமானது. சிகிச்சையளிக்கப்பட்ட பெண்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் ஆரோக்கியமான குழந்தைகளைக் பெற்றார்கள்.
மேலும் உள்ளூர் சாதனங்களை மட்டுமே கொண்ட மாவட்ட மருத்துவமனையில் பெறப்பட்டதால் அவருடைய சாதனை  குறிப்பிடத்தக்கது. 
இவர் ராபர்ட் எட்வர்ட்ஸ் உடன் பணிபுரிந்து,
லூயிஸ் ஜாய் பிரவுன், என்ற முதல் உள் கருவுறுதல் பரிசோதனை மூலம், 25 ஜூலை 1978 அன்று பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நூல்கள்:-


1967 ஆம் ஆண்டு,Laparoscopy in Gynaecology என்ற புத்தகத்தை வெளியிட்டார்.

விருதுகள்:-

மார்ச் 1987 இல் ராயல் சொஸைட்டியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் .

மறைவு:-

மார்ச்-21, 1988 ஆம் ஆண்டு,
கேன்டர்பரி இங்கிலாந்தில் மரணமடைந்தார்.


No comments:

Powered by Blogger.