Home
MARCH
மார்ச்-21. புதைபடிம ஆராய்ச்சி என்ற அறிவியல் துறை உருவாக காரணமான இங்கிலாந்து தொல்பொருள் ஆய்வாளர்- மேரி அன்னிங் (Mary Anning) மறைந்த தினம்.
மார்ச்-21. புதைபடிம ஆராய்ச்சி என்ற அறிவியல் துறை உருவாக காரணமான இங்கிலாந்து தொல்பொருள் ஆய்வாளர்- மேரி அன்னிங் (Mary Anning) மறைந்த தினம்.
12:07
Read
இன்று நினைவு நாள்:- மார்ச்-21.
புதைபடிம ஆராய்ச்சி என்ற அறிவியல் துறை உருவாக காரணமான இங்கிலாந்து தொல்பொருள் ஆய்வாளர்- மேரி அன்னிங் (Mary Anning) மறைந்த தினம்.
பிறப்பு:-
இங்கிலாந்தின் டார்செட் நகரில்
மே-21, 1799 ஆம் ஆண்டு பிறந்தார். மேரி 15 மாதக் குழந்தையாக இருந்தபோது அவரை மரத்தடியில் பக்கத்து வீட்டுப் பெண்கள் வைத்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த மரம் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. மற்றவர்கள் அனைவரும் இறந்துபோக, இவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.
அந்த விபத்துக்குப் பிறகு இவரிடம் நிறைய மாற்றங்கள் காணப்பட்டன. சாதாரணமாக இருந்த இவர் அதன் பிறகு, புத்திசாலித்தனமாக மாறிவிட்டார். வறுமை காரணமாக மேரியால் முறையான கல்வி கற்க முடியவில்லை. தனது கல்வியை தேவாலயத்தில் எழுதப் படிக்கக் கற்றார்.
தந்தை மரச்சாமான்கள் தயாரிப்பவராக இருந்தார்.
பணிகள்:-
இவர் ஓய்வு நேரங்களில் புதைபடிமங்களை சேகரித்து அவற்றை சுற்றுலா பயணிகளிடம் விற்பார். மேலும்
சிப்பி, சங்குகளை சேகரிக்க, தந்தையுடன் செல்வார்.
ஆராய்ச்சிகள்:-
பண்டைய விலங்குகளின் எலும்புகள் உட்பட பல அரிய வகை தொல்படிமங்களை சேகரிப்பதில் மெல்ல மெல்ல மேரியும் நிபுணத்துவம் பெற்றார். பல முக்கியத்துவம் வாய்ந்த தொல்படிமங்களை கண்டறிந்தார். 1823 ஆம் ஆண்டு முதன்முதலாக ப்ளிசியோசரஸ் என்ற அரிய விலங்கின் முழு எலும்புக்கூட்டை கண்டறிந்தார். பறக்கும் ஊர்வன வகை டிராகான் எலும்பை 1828 ஆம் ஆண்டு கண்டெடுத்தார். அடுத்த ஆண்டில் ஸ்கொலராஜா என்ற அரிய வகை மீனின் எலும்புக்கூட்டை தோண்டியெடுத்தார்.
குறைவாகவே கல்வி கற்றிருந்தாலும், இரவல் வாங்கியே ஏராளமான நூல்களைப் படித்தார். அதில் இருந்து முக்கியமான விவரங்களை குறிப்பு எழுதி வைத்துக்கொள்வார். தான் கண்டறிந்த தகவல்களையும் தொகுத்து எழுதினார். புவி வரலாறு, பண்டைய உயிரினங்களின் வரலாறு குறித்து பல விஷயங்களைத் தெரிந்து வைத்திருந்தார். ஒரு எலும்புக்கூட்டை பார்த்தாலே, அது எந்த வகை உயிரினத்தை சேர்ந்தது என்று கூறும் அளவுக்கு நுட்பமான அறிவு கொண்டிருந்தார்.
அந்த காலகட்டத்தில் மக்கள் மத்தியில் புதைபடிமம் குறித்த விழிப்புணர்வு குறைவாகவே இருந்தது. இவரது கண்டுபிடிப்புகளுக்குப் பிறகுதான், புதிதாக இதுதொடர்பான ஆராய்ச்சித் துறை உருவானது. புதைபடிமங்களைத் தேடும் பணி உலகம் முழுவதும் தொடங்கியது.
வறுமையால் பெரிய அளவிலான ஆராய்ச்சிகளில் இவரால் ஈடுபட முடியவில்லை. ஆனால், ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளின் புதைபடிவ ஆராய்ச்சியாளர்கள் பலர் இவரை சந்தித்து சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொண்டனர்.
தான் சேகரித்த அரிய வகை சிப்பிகள், சங்குகள், ஏராளமான தொல்படிமங்களைக் கொண்டு ஒரு விற்பனை நிலையத்தை தொடங்கினார்.
விருதுகள்:-
மேரியை கவுரவ உறுப்பினராக டார்செட் கவுன்ட்டி மியூசியம் அங்கீகரித்தது.
மறைவு:-
புதைபடிம ஆராய்ச்சி என்ற புதிய அறிவியல் துறை உருவாகக் களம் அமைத்து தந்து, பழைய சரித்திரத்தை எதிர்வரும் தலைமுறைகள் அறிந்துகொள்ள வழியமைத்துக் கொடுத்த சாதனை மங்கையான இவர்,
மார்ச்-09, 1847 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.
சிறப்புகள்:-
163 ஆண்டுகளுக்குப் பின்னர், பிரித்தானியாவில் அறிவியல் வளர்ச்சிக்குப் பாடுபட்ட பத்து பெண்களின் பட்டியலில் இவரது பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மார்ச்-21. புதைபடிம ஆராய்ச்சி என்ற அறிவியல் துறை உருவாக காரணமான இங்கிலாந்து தொல்பொருள் ஆய்வாளர்- மேரி அன்னிங் (Mary Anning) மறைந்த தினம்.
Reviewed by JAYASEELAN.K
on
12:07
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
12:07
Rating: 5


No comments: