இன்று நினைவு நாள்:- மார்ச்-23.
நரம்புக்கடத்திகளின் நடவடிக்கைகளை தடுக்க மருந்துகள் கண்டுபிடித்த சுவிட்சர்லாந்தில் பிறந்து இத்தாலிக்கு குடிபெயர்ந்து மருத்துவத்திற்கான நோபல் பரிசைப் பெற்றவர்-டேனியல் போவே (Daniel Bovet)
பிறந்த தினம்.
பிறப்பு:-
மார்ச்-23, 1907 ஆம் ஆண்டு
சுவிட்சர்லாந்தில் பிறந்தார். இவர் 1927ஆம் ஆண்டு ஜெனீவா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். பின்னர் 1929 ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார்.
கண்டுபிடிப்புகள்:-
நரம்புக்கடத்திகளின் நடவடிக்கைகளை தடுக்க மருந்துகள் கண்டுபிடித்தார்.
1937 ஆம் ஆண்டில் ஆன்டி ஹிஸ்டமைன் கண்டுபிடித்தார். மேலும் இது நியூட்ரோ ட்ரான்ஸ்மீட்டாரை ஹஸ்டமைன் தடுக்கும் மருந்தாகவும், ஒவ்வாமை மருத்துவத்திலும் இது பயன்படுத்தப்படுகிறது. மேலும் அவருடைய ஆராய்ச்சிகளில் கீமோதெரபி, சல்ஃபா மருந்துகள், சிம்பத்தடிக் நரம்பு மண்டலம், போன்றவற்றிலும் ஆய்வுகள் மேற்கொண்டார்.
பணிகள்:-
1929 முதல் 1947 ஆம் ஆண்டு வரை பாரிஸில் உள்ள பாஸ்டியர் நிருவனத்தில் பணியாற்றினார். 1947 முதல் ரோமின் தேசிய சுகாதார நிருவனத்தில் பணியாற்றினார். 1964 இல், சசாரி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆனார்.
விருதுகள்:-
உடலியக்கவியல் அல்லது மருத்துவம் நோபல் பரிசு (1957) ஆம் ஆண்டு பெற்றார்.
மறைவு:-
1969 முதல் 1971 வரை ரோமின் தேசிய அராய்சிக் கவுன்சிலிலும் பிறகு 1982 வரை ரோமின் சாபியென்ஸா பல்கலைக்கழகத்திலும் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர்,
ஏப்ரல்-08, 1992 ஆம் ஆண்டு, தனது 85 வது வயதில் ரோம், இத்தாலியில் மரணமடைந்தார்.
No comments: