Breaking

மார்ச்-23. 🔗 இந்தியாவின் எடிசன்’, தமிழகத்தின் சிறந்த அறிவியல் மேதை, ஜி.டி.நாயுடு என்று அழைக்கப்படும் கோபால்சாமி துரைசாமி நாயுடு பிறந்த தினம்.





மார்ச்-23.

🔗 இந்தியாவின் எடிசன்’, தமிழகத்தின்  சிறந்த அறிவியல் மேதை, ஜி.டி.நாயுடு என்று அழைக்கப்படும் கோபால்சாமி துரைசாமி நாயுடு  பிறந்த தினம்.



இன்று பிறந்த நாள்:- மார்ச்-23.

🔗 இந்தியாவின் எடிசன்’, தமிழகத்தின்  சிறந்த அறிவியல் மேதை, ஜி.டி.நாயுடு என்று அழைக்கப்படும்* கோபால்சாமி துரைசாமி நாயுடு *பிறந்த தினம்.

🔗 *வாழ்க்கை வரலாறு:

🔗 *கோயம்புத்தூர் மாவட்டம் கலங்கல் கிராமத்தில் (1893) பிறந்தார்.  தொடக்கக் கல்வி மட்டுமே கற்றார்.* 

🔗 *ஏராளமான நூல்களை வாங்கிப் படித்து அறிவை வளர்த்துக்கொண்டார். வியாபாரத் திறனும் பெற்றிருந்தார்.*

🔗 *18 வயது இருக்கும் போது, காலி மருந்துப் புட்டி ஒன்றைப் பார்த்த போது, அது அமெரிக்காவில் தயாராகும் வலி நிவாரணி என்பதை தெரிந்துகொண்டு, அங்கிருந்து  வரவழைத்து, அந்த ஆண்டில்  விற்றதில் ரூபாய் 800 லாபம் சம்பாதித்தார்.*

🔗 *ஹோட்டலில் சர்வராக வேலைபார்த்து, சம்பாதித்த பணத்தில் ஒரு ஆங்கிலேய அதிகாரியின் பைக்கை வாங்கி, அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்தார். அதை மீண்டும் பொருத்தி பக்கவாட்டில் இன்னொருவர் அமர சைட்பாக்ஸ் ஒன்றையும் வடிவமைத்து இணைத்தார்.*

🔗 *திருப்பூரில் பருத்தி ஆலை தொடங்கினார். பெரும் தொழிலதிபராக உயர்ந்தார். பிறகு தொழில் நட்டம் ஏற்பட்டது.* 

🔗 *பிறகு,போக்குவரத்து தொழில் செய்த ஸ்டேன்ஸ் என்பவரிடம் ஒரு பேருந்தை கடனாகப் பெற்று பொள்ளாச்சி பழநி இடையே பஸ் சர்வீஸ் நடத்தினார்.

‘யுனைடெட் மோட்டார் சர்வீஸ்’ *நிறுவனத்தை தொடங்கினார்.

💡 *சில கண்டுபிடிப்புகள்:-

📎 *பேருந்து புறப்படும் நேரத்தைக் காட்டும் கருவி, பயணச்சீட்டு வழங்கும் கருவி.

🔗 *இரும்பு சட்டத்தில் உள்ள நசுக்கல்களையும், வெடிப்புகளையும் கண்டறியும் கருவி (magno flux testing unit).

🔗 *விநோத உருவம் காட்டும் கண்ணாடி பிளேட்டுகள்.

🔗 *காசை போட்டதும் பாடும் தானியங்கி இயந்திரம் (slot singing machine).

🔗 *ஆரஞ்சு பழம் பிழியும் கருவி.

🔗 *மண்ணென்னையில் ஓடும் மின் விசிறி.

🔗 *கேமரா லென்ஸ் டிஸ்டன்ஸ் அட்ஜஸ்டர்.

🔗 *ஒரு அங்குலத்தில் இருநூறில் ஒரு பாகம் (1/200) அளவுள்ள மெல்லிய பிளேடு.

🔗 *கையடக்க எலெக்ட்ரிக் ரேஸர்.

🔗 *மோட்டார் ரேடியேட்டருக்கு இணையான ஒரு இயந்திரத்தைக் கண்டுபிடித்தன் மூலம் ரேடியேட்டருக்கு அடிக்கடி தண்ணீர் ஊற்ற வேண்டியதில்லை.



🔗 *எஞ்சின் ஓடிக்கொண்டிருக்கும்போதே அதன் அதிர்வு விகிதம் அதிகமா, குறைவா என்பதைக் கண்டுபிடிக்க (அதிர்வு சோதிப்பான்) Vibrator Tester என்ற இயந்திரத்தையும் கண்டுபிடித்தார்.*

🔗 *அயல்நாட்டு விஞ்ஞானிகளுக்கு இணையாக நம் நாட்டிலும் அறிவியல் துறையில் சாதனைப் புரிய இயலும் என்று உலகுக்கு நிரூபித்தவர் நாயுடு.

🔗 *சிறப்புகள்:-

🔗 *ஜெர்மனியில் நடந்த பொருட்காட்சியில் இவரது சவரக்கத்தி, பிளேடுக்கு முதல் மற்றும் 3-வது பரிசுகள் கிடைத்தன.

🔗 *விவசாயத் துறையிலும் பல சாதனைகள் புரிந்தார். இவரது தாவர ஆராய்ச்சி முடிவுகள் உலகையே பிரமிக்க வைத்தன. இவரது அதிசய பருத்திச் செடிக்கு ‘நாயுடு காட்டன்’ என பெயரிட்டு ஜெர்மன் கவுரவித்தது.

🔗 *பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகள், பல தொழிற்சாலைகளைத் தொடங்கினார்.*

🔗 *தமிழக தொழிற்கல்வி நிறுவனங்களின் தந்தை எனப் போற்றப்பட்டார்.* 

🔗 இறப்பு:-

🔗சாதாரண கிராமத்தில் பிறந்து தனது திறமையால் பல அரிய சாதனைகளைப் படைத்த ஜி.டி.நாயுடு 81-வது வயதில் (1974) மறைந்தார்.
(கோவை அவிநாசி சாலையில் இவரது கண்டுபிடிப்புகளுடன் கூடிய கண்காட்சி, அருங்காட்சியகம் அவரது அறிவாற்றலை இன்றும் பறைசாற்றுகிறது.)
🔗🔗🔗🔗🔗🔗🔗🔗🔗🔗


No comments:

Powered by Blogger.