Home
MARCH
மார்ச்-28. நிகோலயேவ் வான்கானத்தை நிறுவிய,உருசிய வானியலாலர்- கார்ல் கிறித்தோபொரோவிச் பிரீட்ரிக் நோர் (Karl Khristoforovich Friedrich Knorre) பிறந்த தினம்.
மார்ச்-28. நிகோலயேவ் வான்கானத்தை நிறுவிய,உருசிய வானியலாலர்- கார்ல் கிறித்தோபொரோவிச் பிரீட்ரிக் நோர் (Karl Khristoforovich Friedrich Knorre) பிறந்த தினம்.
11:51
Read
இன்று பிறந்த நாள்:- மார்ச்-28.
நிகோலயேவ் வான்கானத்தை நிறுவிய,உருசிய வானியலாலர்-
கார்ல் கிறித்தோபொரோவிச் பிரீட்ரிக் நோர் (Karl Khristoforovich Friedrich Knorre) பிறந்த தினம்.
பிறப்பு:-
மார்ச்-28, 1801 ஆம் ஆண்டு, எசுதோனியாவைச் தார்பாத்தில் பிறந்தார். இவரது தந்தையார் எர்னெசுட்டு பிரீட்ரிக் நோர் எனும் செருமனியில் பிறந்த வானியலாளர் ஆவார். இவரது தந்தையின் வழிகாட்டுதலில்
கணிதத்திலும் அறிவியலிலும் கல்வி கற்றார். தார்பாத் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார்.
இவர் தன் தந்தையைப் போலவே வானியலாளராக விரும்பினார். இதனால், வானியல் விரிவுரைகளைக் கேட்டும், படித்தும் வானியலில் ஆர்வமாக விளங்கினார்.
பணிகள்:-
வான்காணகத்தின் தலைவராக விளங்கிய வில்கெல்ம் சுத்ரூவ அவர்களிடம் உதவியாளராகப் பணிபுரிந்தார்.
சுத்ரூவ்வின் வழிகாட்டுதலின்கீழ், புவிப்புற அளவையியலில் திறம்பட்ட வல்லுனரானார்.
ஆராய்ச்சிகள்:-
பத்தொன்பது அகவையில் இவரது திறமையைக் கண்டு வியந்த சுத்ரூவ இவரை கருங்கடலில் நிகோலயேவில் ஒரு வான்காணகம் நிறுவ, மதிநுட்பம் வாய்ந்த ஓர் இளம்வானியலாளரைத் தேடிக்கொண்டிருந்த அலெக்சேய் கிரெய்குவிடம் பரிந்துரைத்தார்.
வான்காணகத்துக்கான கருவிகளைத் தேர்வது நோருக்கு ஓர் அறைகூவலாக விளங்கியது. இவர் இதற்காக ஐரோப்பாவில் உள்ள வான்காணகங்களைப் பார்வையிட அலெக்சேய் கிரெய்கிடம் ஒப்புதல் கேட்டார்.
செருமனியில் இவர் பிரீட்ர்க் பெசல், யோகான் பிரான்சு என்கே, ஈன்ரிச் கிறித்தியான் சுமாக்கர் ஆகிய வானியலாளர்களையும் பாரீசில் பிரான்கோயிசு அராகோ அவர்களையும் சந்தித்தார்.
பிறகு வான்காணகத்துக்குத் தேவையான கருவிகளைக் கொள்முதல் செய்துள்ளார். இக்கருவிகளில் இதள் செயற்கைத் தொடுவான் ஆடியும் ஒன்றாகும். அளவைப் பொய்ப்புகளைத் தவிர்க்க முதலில் தொலைநோக்கி வழியாக விண்மீன்களை நேரடியாக நோக்குவதோடு இதல் ஆடி வழியாகவும் மறைமுகமாக நோக்கலாம்.
பதவி:-
இவர் அரசு வானியல் கழக உறுப்பினரானார்.
மறைவு:-
இவர் தன் மகன் விக்தருடன் வாழ பெர்லினுக்குச் சென்றார். அங்கே இவர் 1883 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.
சிறப்புகள்:-
இவரது தந்தை, எர்னெசுட்டு பிரீட்ரிக் நோர் அவர்களும் இவர் மகன், விக்தர் நோர் அவர்களின் நினைவாக அண்மையில் நாசா நிறுவனம் ஒரு குறுங்கோளுக்குப் இவர்கள் பெயரிட்டுள்ளார்கள்.
மார்ச்-28. நிகோலயேவ் வான்கானத்தை நிறுவிய,உருசிய வானியலாலர்- கார்ல் கிறித்தோபொரோவிச் பிரீட்ரிக் நோர் (Karl Khristoforovich Friedrich Knorre) பிறந்த தினம்.
Reviewed by JAYASEELAN.K
on
11:51
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
11:51
Rating: 5


No comments: