Breaking

மார்ச்-30. உலக இட்லி தினம். இட்லி குறிப்புகள்:-







இன்று:- மார்ச்-30.

உலக இட்லி தினம்.

இட்லி குறிப்புகள்:-

இது இட்டவி(இட்டு அவி) என்னும் தமிழ்ச்சொல்லிருந்து மருவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இட்லி சுமார் 700 ஆண்டுகளாக இந்தியாவில் அறியப்பட்டு வந்த ஒரு உணவு பதார்த்தம் ஆகும்.

இட்லியின் பண்டையகால பெயர் இட்டரிக என்பதாகும்.

தமிழ் இலக்கியத்தில் இட்லி சிறந்த உணவு என்றும், அது உடலுக்கு நல்லது என்றும் குறிப்புகள் கூறுகிறது.

ஆவியில் வேக வைத்து தயாரிப்பது தமிழனுக்கு மட்டுமே தெரிந்தவை.

நமது தமிழக தாய்மார்கள் தாய்ப்பாலுக்குக்கு அடுத்து இட்லி தான் குழந்தைகளுக்கு உணவு.



உடல்நிலை சரியில்லாதவர்களுக்கு உடல் உறுதியாக இட்லி தான் சிறந்த உணவு.

இட்லியில் வகைகள் உண்டு:

கருப்பு இட்லி,
செட்டிநாடு இட்லி,
மங்களூர் இட்லி,
காஞ்சிபுரம் இட்லி,ரவா இட்லி,
சவ்வரிசி இட்லி,
சேமியா இட்லி,
சாம்பார் இட்லி,  குஷ்பு இட்லி. 

கருப்பு இட்லிதான் சத்தானது:-

தோல் நீக்காத உளுந்து, அரிசி சேர்த்து ஆட்டும் இட்லி பழுப்பு அல்லது கருப்பு நிறத்தில் இருக்கும். இதுதான் நல்ல ஆரோக்கியமான இட்லி.

எனவே இந்த நாளில் கருப்பு இட்லி வெறுக்காமல் சாப்பிட சபதம் ஏற்போம்.



No comments:

Powered by Blogger.