Breaking

மார்ச்-31. "நான் சிந்திக்கிறேன், அதனால் நான் இருக்கிறேன். I Think, therefore I am.- RENE DESCARTES கார்டீசிய ஆய முறைமை (Cartesian coordinate system), பகுப்பாய்வு வடிவியலில் (analytical geometry) முறையை உருவாக்கிய பிரான்சு நாட்டு மெய்யியல் அறிஞர்- ரெனே டெஸ்கார்டஸ்(Rene Descartes) பிறந்த தினம்.





இன்று பிறந்த நாள்:- மார்ச்-31.

"நான் சிந்திக்கிறேன்,
அதனால் நான் இருக்கிறேன். I Think, therefore I am.- RENE DESCARTES



கார்டீசிய ஆய முறைமை (Cartesian coordinate system), பகுப்பாய்வு வடிவியலில் (analytical geometry) முறையை உருவாக்கிய பிரான்சு நாட்டு மெய்யியல் அறிஞர்-
ரெனே டெஸ்கார்டஸ்(Rene Descartes) 
 பிறந்த தினம்.


பிறப்பு:-


மார்ச்-31, 1596 ஆம் ஆண்டு பிரான்சில் லா ஹயே என் துரெயின் ஊரில் பிறந்தார். பிறகு டச்சு குடியரசில் வசித்தார்.  
1607 ஆம் ஆண்டில் அவரது உடல்நிலையின் காரணமாக லா-பிலெஞ்சிலுள்ள ஜேசூயிட் கல்லூரியில் சேர்ந்தார்.அங்கே அவருக்கு கணிதம், இயற்பியல் மற்றும் கலிலியோவின் கண்டுபிடிப்பு வேலைகள் உள்ளிட்டவை அறிமுகப்படுத்தப்பட்டது. 1614 ஆம் ஆண்டில் பட்டம் பெற்ற பிறகு, 1615 முதல் 1616 வரை பொய்ட்டீர் பல்கலைக்கழகத்தில் இரண்டு வருடங்கள் படித்தார். அங்கு இளங்கலை பட்டமும் பொதுச்சட்டவியல் தொழில் செய்ய உரிமமும் பெற்றார். அதனையடுத்து தனது தந்தையின் விருப்பப்படி வழக்கறிஞரானார்.
இவர் கல்லூரியில் கணிதம் மற்றும் இயற்பியலையும் பயின்றார்.

ஆராய்ச்சிகள்:-


இவரின் கண்டுபிடிப்பான கார்டீசிய ஆய முறைமை (Cartesian coordinate system) கணிதத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. மேலும் பகுப்பாய்வு வடிவியலில் (analytical geometry) பெரிதும் பணியாற்றினார். இவரின் கண்டுபிடிப்புகள் பொறியியல், கணிதம், இயற்பியல் என பல துறைகளில் பயன்படுத்தப்படுகிறது. அக்காலத்தில் இருந்த மதச் சடங்குகளை தவிர்த்து அதன் வழி அறிவியல் ஆராய்ச்சியை நடத்தினார். இவர் மனித வாழ்வின் முடிவு என்ன? அதே போல் ஆரம்பம் என்ன? நம்மை கடவுள் தான் உருவாக்கினார் என்றால் அவருக்கு அந்த அளவிற்கு யார் சுதந்திரம் தந்தது என்ற கேள்விகளை தன்னுள் எழுப்பிக்கொண்டு அதற்கான விடைகளை தேட ஆரம்பித்தார். நாம் வாழ்வதற்கு ஏதேனும் காரணம் உண்டா? நீங்களும் நானும் பிறந்ததிற்கு ஏதேனும் காரணம் உண்டா? என அனைத்தையும் ஆராய்ந்தார். அப்போது தான் அவருக்கு பொறி தட்டியது இவற்றை பற்றி நாம் சிந்திக்கிறோம் ஆனால் நம் சிந்தனை பற்றி நாம் உணருவதில்லை என்ற எண்ணம் அவருக்கு உதித்தது. பின் தனது சிந்திக்கும் திறனை ஆராய்ந்தார். சிந்தனை என்ற ஒரு செயல் நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் மறைமுகமாக இருப்பதை உணர்ந்தார். மேலும் அவையே மனிதனுக்கு இருக்கும் சக்திகளில் மிக வலிமை வாய்ந்தது எனவும் கருதினார். 
ஆகவே மனம் என்பது மூளை கொடுத்த சிந்தனையின் அதீத வெளிபாடு மட்டுமே என்று கூறினார்.


புத்தகங்கள்:-



1626- Rules for The Direction of The Mind.

1641- Meditations on first Philosopy(மனதின் திசை விதி)


மறைவு:-


நவீன தத்துவவியலின் தந்தை என புகழப்பட்ட
இவர், நிமோனியா நோயினால் பாதிக்கப்பட்டதால் சுவீடன் இசுட்டாக்கோமில் 1650, பிப்ரவரி-11 இல் தனது 54 வது வயதில்  மரணமடைந்தார்.

சிறப்புகள்:-

இவருடைய 'மெடிடேசன்ஸ் ஆப் பர்ஸ்ட் பிலாசபி' (Meditations on First Philosophy) என்ற நூல் பல பல்கலைக் கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கவை ஆகும்.

No comments:

Powered by Blogger.