Home
MARCH
மார்ச்-31. ஓர் அமெரிக்கக் கோட்பாட்டு இயற்பியலாளர், வானியலாளர்- இலைமன் சுட்டிராங் சுபிட்சர் (Lyman Strong Spitzer, Jr.) மறைந்த தினம்.
மார்ச்-31. ஓர் அமெரிக்கக் கோட்பாட்டு இயற்பியலாளர், வானியலாளர்- இலைமன் சுட்டிராங் சுபிட்சர் (Lyman Strong Spitzer, Jr.) மறைந்த தினம்.
10:58
Read
இன்று நினைவு நாள்:- மார்ச்-31.
ஓர் அமெரிக்கக் கோட்பாட்டு இயற்பியலாளர், வானியலாளர்-
இலைமன் சுட்டிராங் சுபிட்சர் (Lyman Strong Spitzer, Jr.) மறைந்த தினம்.
பிறப்பு:-
சுபிட்சர் ஒகியோவில் உள்ள தொலிடோவில் ப்ரெசுபைடேரியக் குடும்பத்தில்
ஜூன்- 26, 1914 இல் பிறந்தார்.
இவர், ஓகியோ, தொலிடோவில் உள்ள சுகாட் உயர்நிலைப் பள்ளியில் படித்தார்.
பின்னர் 1929 இல் பிலிப்சு கல்விக்கழகத்தில் பயின்றார்.
அதன் பிறகு, யேல் கல்லூரியில் சேர்ந்து 1935 இல் பை—பீட்டா-கப்பா பட்டம் பெற்றார்.
இவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஓராண்டூ பயிலும்போது ஆர்த்தர் எடிங்டனாலும் இளைஞர் சுப்பிரமணியன் சந்திரசேகராலும் பெரிதும் கவரப்பட்டுள்ளார்.
பின் ஐக்கிய அமெரிக்காவுக்கு மீண்டும், பிரின்சுடன் பல்கலைக்கழகத்தில் 1935 இல் கலை முதுவர் பட்டமும், 1938 இல் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.
அறிவியல் ஆராய்ச்சிகள்:-
இவர் அறிவியலாளராக, விண்மீன்கள் உருவாக்கம் மின்ம இயற்பியல் ஆய்வுகளில் ஈடுபட்டார்.
இவர் 1946 இல் விண்வெளியில் இயங்கும் தொலைநோக்கிகளை உருவாக்குவதில் ஈடுபட்டார்.
இவர் ஒரு மின்மக் கருவியை உருவாக்கினார். நாசாவின் இந்தக் கருவி சுபிட்சர் விண்வெளித் தொலைநோக்கி எனப்படுகிறது.
பணிகள்:-
இவர் யேல் பல்கலைக்கழகத்தில் சிறிதுகாலம் துறைப்புல உறுப்பினராக இருந்தபோது போர்க்கால அறிவியல் பணியாக சோனார் உருவாக்கப் பணியில் ஈடுபட நேர்ந்துள்ளது.
இவர் 1947 இல், என்றி நோரிசு இரசலுக்குப் பிறகு பிரின்ஸ் வான்காணக இயக்குநரானார். இதற்கு இவரும் மார்ட்டின் சுவார்சு சைல்டும் கூட்டாக 1070 வரை தலைமையேற்றனர் .
விருதுகள்:-
ஹென்றி ட்ராப்பர் பதக்கம் (1974)
நேஷனல் மெடல் ஆஃப் சயின்ஸ் (1979)
க்ராப்போர்டு பரிசு (1985)
இறப்பு:-
1997 ஆம் ஆண்டு, மார்ச்- 31 அன்று தனது 82 வது வயதில் பிரிசிடோன் , நியூ ஜெர்சி அமெரிக்காவில் மரணமடைந்தார்.
மார்ச்-31. ஓர் அமெரிக்கக் கோட்பாட்டு இயற்பியலாளர், வானியலாளர்- இலைமன் சுட்டிராங் சுபிட்சர் (Lyman Strong Spitzer, Jr.) மறைந்த தினம்.
Reviewed by JAYASEELAN.K
on
10:58
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
10:58
Rating: 5


No comments: