Breaking

விமானம் ஏறியவுடன் விமானத்தில் AC போட்ட சிறிது நேரத்தில், AC வரும் வழியாக வெள்ளை நிற புகை வருவது எதனால்? AC காற்றின் உடன் எதையும் கலந்து அனுப்புகிறார்களா?







விமானம் ஏறியவுடன் விமானத்தில் AC போட்ட சிறிது நேரத்தில், AC வரும் வழியாக வெள்ளை நிற புகை வருவது எதனால்? AC காற்றின் உடன் எதையும் கலந்து அனுப்புகிறார்களா? 


காற்றில் அதிகமான ஈரப்பதம் இருக்கும் போது இதுபோல் நடைபெறுவது உண்டு. Good

குளிர்விக்கும் கருவிகள் பொதுவாக ஈரப்பதத்தை எடுத்து விட்டுத்தான் குளிர் காற்றை உள்ளே அனுப்பும்.

விமானத்தில் உள்ளேயே காற்றை மறுசுழற்சி செய்ய இரண்டு விசை விசிறிகள் (Recirculating Fans) இருக்கும்.

தரையிலுள்ள விமானத்தில் குளிர்விக்கப்பட்ட காற்று மற்றும் ஏற்கனவே ஈரப்பதம் உள்ள வெளிக் காற்று கதவுகள் திறந்து இருப்பதால் உள்ளே வர வாய்ப்பு உள்ளதால் இரண்டு வகையான வெட்பத்தில் ஒன்றாய் கலக்கும்.

அதனால் அந்த காற்று குளிர்விக்க படும் போது ஈரப்பதவிகிதம் மேலும். ( Humudity) அதிகமாகி புகை போன்ற தோற்றத்தைத் தரும்.

குளிர்விக்கும் காற்றின் வெப்பத்தை சிறிது அதிகரித்தாலே வெண் புகை மாயமாய் மறைந்துவிடும்.

தாங்கள் நினைத்தபடி யாரும் எதையும் கலந்து அனுப்புவதில்லை.

வெளியே காற்றின் ஈரப்பதம் அதிகமாக இருந்தாலும் மேலும் விமானத்தின் உள்ளே காற்று மறுசுழற்சி செய்யப்படுவதாலும் வெண்புகை தோன்றி சில பயணிகளை பயமுறுத்தும்

No comments:

Powered by Blogger.