இந்த உலகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பொருள்களில் என்றும் மாறாமல் இருப்பதை பற்றி பார்ப்போம்..
ஒரு விஞ்ஞானி இருந்தார். அவர் விஞ்ஞானியா என்று கூட தெரியவில்லை. எப்படியோ… அவர் இருந்தார். அவருக்கு ஏதையேனும் கண்டுபிடிக்க வேண்டும் என்ற தேடல் எல்லாம் ஒன்றும் இல்லை.
ஒரு நாள் சும்மா கையில் கிடைத்த ஒரு கம்பியை வைத்து பொழுது போகாமல் மடக்கியும் நீட்டியும் என்னவோ செய்து கொண்டிருந்தார்.
திடீரென அவர் அந்த கம்பி ஒரு விதமான வித்தியாசமான வடிவில் இருப்பதை கவனித்தார். அந்த வடிவமானது நன்கு பலமாக இருப்பதை கவனித்தார். அதைத் தன் சட்டையில் குத்திக் பார்த்தார். உடனே அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. அந்த வடிவத்தைக் கொண்டே ஒரு ஊக்கைச் செய்தார்.
இவ்வாறாக நமக்கு கிடைத்தது தான் safety pin
இந்த உலகத்தில் அறிவியல் கண்டுபிடிப்புகளும் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பொருள் மாற்றமடைந்து வேறு பொருளாக மாறியுள்ளது.
ஆனால் இந்த ஒரு பொருள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்ட நாள் முதல் இதுநாள் வரை எந்த மாற்றமும் அடையாத ஒரே பொருள் ஆகும்


No comments: