Breaking

பசுவின் சாணம் கொரோனா வைரஸைக் குணப்படுத்துமா ? சித்த மருத்துவர் கு.சிவராமன் பதில்






பசுவின் சாணம் கொரோனா வைரஸைக் குணப்படுத்துமா? சித்த மருத்துவர் கு.சிவராமன் பதில்

எங்கோ சீனாவில்தானே பாதிப்பு என்றிருந்த கொரோனா வைரஸின் வீரியம் இந்தியாவுக்குள்ளும் ஊடுருவி விட்டது. இந்தியாவில் மட்டும் 29 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது இன்றைய நிலவரம்.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் நோய்க்கு இன்றுவரை 80-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 95,400-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு சீனாவைத் தாண்டியும் ஏற்படத் தொடங்கியுள்ளது. இந்த நோய்க்கு இதுவரை 3,286 பேர் பலியாகியுள்ளனர்.
கொரோனா வைரஸ் நோய்க்கு இதுவரை தடுப்பு மருந்துகளும் கண்டறியப்படவில்லை.

சிகிச்சைக்கான பிரத்யேக மருந்துகளும் கண்டறியப்படவில்லை. அறிகுறிகளுக்கான சிகிச்சையே உலகம் முழுவதும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் சீன அதிபர் ஜின்பிங், இந்நோய்க்கு மருந்து கண்டுபிடிக்குமாறு உலக நாடுகளுக்கு அழைப்புவிடுத்துள்ளார்.




மருத்துவர் கு.சிவராமன்

பசுவின் சாணத்தை எரிப்பதால் வெளிவரும் புகை, நோயைக் குணப்படுத்தும் என்பதெல்லாம் வெறும் அனுமானம்தான். இத்தகைய நோய்களை ஆன்மிகத்தின் வழியாக அணுகாமல், அறிவியல்பூர்வமாக அணுக வேண்டும்.

பசுவை ஒரு மதத்தின் குறியீடாக வைத்துக்கொண்டு கொரோனா வைரஸ் தாக்கம் போன்று ஏதாவது நிகழும்போது அதைப் பயன்படுத்திக்கொள்ளும் போக்குதான் நிலவுகிறது. பசுவின் சாணம், கோமியத்தைப் பயன்படுத்தி விவசாயத்தில்தான் பஞ்சகவ்யம் போன்ற மருந்துகளைத் தயாரிக்கின்றனர். அவற்றில் காணப்படும் பாக்டீரியா மண்ணுக்கு நல்லது செய்வை என்பதால் பயன்படுத்தப்படுகிறது. விவசாயத்துக்கு இது ஓகே. ஆனால், சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவத்தில் இவை மருந்தாகப் பயன்படுவதாக எந்த ஆதாரமும் இல்லை.

இந்த நேரத்தில் மாற்று மருத்துவ முறையைப் பின்பற்றும் மருத்துவ நிபுணர்கள், முதலில் உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நோய் பரவாமல் தடுக்கும் ஆலோசனைகளைப் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். கொரோனா வைரஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வேறு வைரஸ்களின் தாக்கத்தைப் போக்குவதற்குப் பயன்பட்ட மூலிகைகளை வைத்து அடிப்படை ஆய்வுகளைச் செய்து பார்க்க வேண்டும்.

கொரோனா வைரஸ் தாக்கம் 1960-ம் ஆண்டு முதல் வேறு வேறு வகையாக இந்த உலகில் சஞ்சரித்துக்கொண்டிருக்கிறது. அதனால் அந்தக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட மூலிகைகள் இதற்கும் பயன்படுமா என்று ஆய்வு செய்து பார்க்க வேண்டும். அதைவிடுத்து ஆதாரங்கள் இல்லாத தகவல்களையெல்லாம் பரப்பக்கூடாது" என்றார்.



மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் `சூத்ரா' என்ற பெயரில் பசுவின் சாணத்தில் ஆய்வு மேற்கொள்ளும் திட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. 

No comments:

Powered by Blogger.