அறிவியல் கண்காட்சியில் மாணவியின் புதிய கண்டுபிடிப்பு வயர் இணைப்பு இல்லாமல் மின் காந்த அலையில் எரியும் பல்பு
அறிவியல் கண்காட்சியில் மாணவியின் புதிய கண்டுபிடிப்பு வயர் இணைப்பு இல்லாமல் மின் காந்த அலையில் எரியும் பல்பு
குடியாத்தத்தில் நடந்த அறிவியல் கண்காட்சியில், வயர் இணைப்பு இல்லாமல் மின்காந்த அலையில் பல்பு எரியும் தொழில் நுட்பத்தை பள்ளி மாணவி தயாரித்து வைத்திருந்தது அனைவரையும் கவர்ந்தது.வேலூர் மாவட்டம், குடியாத்தம், நெல்லூர்பேட்டை ஜோதி அரசு நிதிஉதவி பள்ளியில் மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி நேற்று நடந்தது. இதில், பல்வேறு விதமான அறிவியல் கருவிகளை மாணவர்கள் தயாரித்து பார்வைக்காக வைத்திருந்தனர். அதில், எந்த விதமான மின் ஒயர் இணைப்பும் இல்லாமல் குழல் விளக்கு, சிஎப்எல் விளக்குகள் எரியும்
விதமாக ஒரு கருவி தயாரிக்கப்பட்டு இருந்தது அனைவரையும் கவர்ந்தது.இதுகுறித்த விவரம் வருமாறு:
இவர் தனது உடற்பயிற்சி ஆசிரியர் கண்ணபிரான் உதவியுடன், கம்பியில்லா மின் அமைப்பை உருவாக்கியுள்ளார்.அதன் அருகில் சிஎப்எல் விளக்குகள், குழல் விளக்குகள் போன்றவற்றை கொண்டு சென்றாலே எவ்வித இணைப்பும் இல்லாமல் தானாக ஒளிரும் என்று செய்தும் காட்டினார். அதிக ஆம்பியர் உள்ள குறைந்த மின்னழுத்தத்தை, மிக உயர் அதிர்வெண்ணுடைய குறைந்த ஆம்பியர், அதிக மின்னழுத்தமாக மாற்றும் போது அது தானாகவே காற்றில் பரவும் தன்மை கொண்டதாக மாறும். அந்த அமைப்பின் அருகில் ப்லோரோசென்ட் விளக்குகளை வைத்தால் அவை தானாக ஒளிரும் என்று மாணவி விளக்கமளித்தார்.மேலும், இக்கருவி 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த அறிவியல் மேதையான நிகோலா டெஸ்லாவின் கண்டுபிடிப்பு மாதிரி என்று கூறப்படுகிறது. அன்றைய காலங்களில் டெஸ்லாவிற்கு அவருடைய கண்டுபிடிப்பை மேம்படுத்த போதிய நிதி கிடைத்திருந்தால் இன்று உலகம் முழுக்க உள்ள மக்கள் கம்பி இல்லா மின்சாரத்தை பயன்படுத்தி இருப்பார்கள் என்று மாணவி தெரிவித்தார். மாணவியின் இந்த கண்டுபிடிப்பை பள்ளி தலைமை ஆசிரியை, பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் பலரும் பாராட்டினார்கள்.
குடியாத்தம் அடுத்த பெரும்பாடி கிராமத்தை சேர்ந்த 4ம் வகுப்பு மாணவி நேத்ரா, அறிவியல் மற்றும் விளையாட்டில் அதிக ஆர்வமுடையவர்.


No comments: