வீட்டிலேயே இயற்கையான முறையில் சானிடைசர் தயாரிப்பது எப்படி?
வீட்டிலேயே இயற்கையான முறையில் சானிடைசர் தயாரிப்பது எப்படி?
சானிடைசர் என்பது கிருமிகள் மற்றும் அழுக்குகள் நம்மை தொற்றிக்கொள்ளாமல் இருக்க கைகளில் தடவி பயன்படுத்துவார்கள். பெரும்பாலாக நாம் வீட்டில் பயன்படுத்துவதில்லை. வெளியில் மாசு குறைபாடுகள் மற்றும் கிருமிகளை அழிப்பதற்காக பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். உங்களை நீங்களே தற்காத்துக் கொள்ள இந்த சானிடைசரை பயன்படுத்தலாம். இதனால் தொற்றுகள் உங்களை விரைவில் நெருங்காமல் இருக்கும். ஆனால் இதை குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்த்து விடுங்கள். காரணம் அவர்கள் கைகளில் போட்டுவிட்டு வாயில் வைத்துக் கொண்டால் அது நச்சாக மாறிவிடும். அதனால் பெற்றோர்கள் அதை தவிர்த்து விட வேண்டும்.
மஞ்சள் :
மஞ்சள் மிகச்சிறந்த கிருமி நாசினியாக செயல்படுவது நாம் அறிந்த ஒன்றே. மஞ்சள் உடலுக்கு உட்புறமும், வெளிப்புறமும் உடலை சுத்தப்படுத்த உதவுகிறது. இது நோயை ஏற்படுத்தும் தொற்றுக்களை அழிப்பது மட்டுமில்லாமல், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தர உதவுகிறது. இதனால் விஷபூச்சிகளும் உங்களை நெருங்காது. அம்மை தொற்று பிறருக்கு பரவாமல் இருக்க தற்போது வரை வேப்பிலையுடன், மஞ்சளை சேர்த்து தான் பயன்படுத்துவார்கள்.
சானிடைசர் தயாரிக்க தரமான மஞ்சளை வாங்குவது அவசியமாகும்.
மேலும் சுத்தமான தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள்.
ஒரு கண்ணாடி பாட்டிலை எடுத்துக் கொள்ளுங்கள்.
ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். பின்பு அதனுடன் 2 தேக்கரண்டி மஞ்சள் சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.
இதை அந்த கண்ணாடி பாட்டிலில் ஒரு காட்டன் துணியில் ஊற்றி வடித்து வைத்துக் கொள்ளுங்கள்.
கைகளை நீங்கள் சோப்பு போட்டு கழுவினாலும் இந்த மஞ்சள் தண்ணீரை உங்கள் கைகளில் ஊற்றி ஒரு 30 நொடிகள் வரை வைத்திருந்து பின்பு குளிர்ந்த தண்ணீரைக் கொண்டு கைகளைக் கழுவிக் கொள்ளலாம். சில சமயம் அப்படியே விட்டுவிடலாம்.
இவை எப்படி பயன்படுத்தினாலும், உங்களுக்கு நன்மையையே தரும்.உடலுக்குள் சென்றாலும் தீங்கு விளைவிக்காது.
இதை வீட்டிற்குள்ளும் தெளித்து விட்டால் கிருமிகள் உங்கள் வீட்டையும் நெருங்காது. இதை நீங்களும் வீட்டில் ட்ரை செய்து பாருங்கள் நண்பர்களே.
No comments: