Breaking

நாம் தினமும் குடிக்கக்கூடிய தண்ணீரின் அளவு, அவற்றால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்...

                                                                     


நாம் தினமும் குடிக்கக்கூடிய தண்ணீரின் அளவு, அவற்றால் ஏற்படும் நன்மைகள்  பற்றி தெரிந்து கொள்வோம்...

தினமும் சராசரி மனிதன் 2 லிட்டர் முதல் 3 லிட்டர் வரை குடிக்க வேண்டும்.
தண்ணீரின் அளவு வயது, உடல் பராமரிப்பு, கால நிலை மற்றும் பாலினம் ஆகியவற்றை பொறுத்து மாறுபடும்.

உடலின் நீர்மங்களை சமநிலைப்படுத்துதல் :

மனிதனின் உடல் 60% தண்ணீரைக் கொண்டுள்ளதால், தேவையான அளவு தண்ணீர் உடலுக்கு தேவைப்பட்டுக் கொண்டே இருக்கும். அப்போதுதான் செரிமானம், கிரகித்தல், இரத்த ஓட்டம், எச்சில் உருவாக்கம், ஊட்டச்சத்துக்கள் சென்றடைதல் மற்றும் உடலின் வெப்பநிலை பராமரிப்பு போன்ற செயல்பாடுகள் சரியாக நடக்கும்.

கலோரிகளை கட்டுப்படுத்துதல்:

எடை குறைக்க விரும்புபவர்கள் தண்ணீரை குடிக்கலாம். உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு தண்ணீர் மிகச்சிறந்த மருந்தாக செயல்படுகின்றது. தண்ணீர் பசியை குறைக்க உதவுகிறது, செரிமானத்தை ஏற்படுத்தி கலோரியின் அளவை குறைக்க உதவுகிறது.

தலை பாரத்தை குறைத்தல்:

உடலில் வறட்சி ஏற்பட்டால் தலை பாரமாக இருக்கும், இதை தவிர்க்க நீங்கள் தேவையான அளவு தண்ணீர் குடிப்பது அவசியமான ஒன்றாக இருக்கும்.இதனால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.

சக்தியூட்டுதல்:

தண்ணீரில் அதிகப்படியான சத்துக்கள் இல்லை என்றாலும், உடலில் தண்ணீரின் அளவு குறையும் போது, நமக்கு சோர்வும், பலவீனமும் ஏற்படும்.
எனவே சோர்வு மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளை விரட்டியடிக்க தண்ணீர் குடிப்பது அவசியமானதாக இருக்கும்.
குளிர்ந்த தண்ணீரை குடிப்பதால், நம்முடைய உடல் புத்துணர்ச்சி அடைவது மட்டுமில்லாமல், உடலில் இருக்கும் உஷ்ணமும் குறைந்து விடும். இது உடலில் இருக்கும் அதிகபட்சமான வெப்பத்தை ஏற்படுத்தும் கலோரிகளை எரித்து விடும்
தோல் பராமாரிப்பு:

உங்களுடைய தோலுக்கு தேவையான அளவு தண்ணீர் தேவைப்படும், நீங்கள் சரியான அளவு குடிக்காத போது தோலானது வறட்சியாகவும், சுருக்கங்களுடனும் காணப்படும். தோலானது வியர்வையின் மூலமாக தண்ணீரை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

சிறுநீரகங்களின் ஆரோக்கியம்:

நம் உடலின் செல்களில் இருந்து தேவையில்லாத பொருட்களை வெளியேற்ற நீர்மங்கள் முயலுகின்றன. நமது உடலில் இருக்கும் முதன்மையான தண்ணீரில் கரையக்கூடிய நச்சுப் பொருள் யூரிய நைட்ரஜன். இவை தண்ணீர் வழியாக சிறுநீரகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, சிறுநீராக வெளியேறுகிறது. இதனால் சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்கும்.

இரைப்பையின் செயல்பாட்டுக்கு உதவுதல் :


குடல் மற்றும் இரைப்பைக்கு குறிப்பிட்ட அளவு தண்ணீர் தேவைப்படுகிறது. தண்ணீர் சரியான அளவு குடித்தால், இரைப்பை சுத்தமாக இருக்கும்.

நச்சு நீக்கி:

நம்முடைய உடலில் உள்ள பெரும்பாலான நச்சுப்பொருட்கள் வெளியேற தண்ணீர் உதவுகிறது. இந்த வகையான நச்சுப்பொருட்களை செல்கள் வழியாக நீர்மங்களாக வெளியேற்ற தண்ணீர் பெரிதளவில் உதவி புரிகின்றது.

தசைகள்:

உடலில் உள்ள தசைகள் செயல்படும் போது அதனுடைய மேற்பரப்பில் ஏராளமான இழுவிசைகள் ஏற்படும். இந்த வகையான செயல்பாடு சரியான அளவில் நடைபெற நம் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் தேவைப்படுகிறது. எனவே சரியான அளவு தண்ணீர் குடித்து வந்தால் நம் உடலில் தசைபிடிப்பு மற்றும் சுளுக்குகள் ஏற்படாமல் இருக்கும்.

மூட்டுகளுக்கு நன்மை தருதல்:

தண்ணீரை தேவையான அளவு குடிப்பதால், மூட்டுகள் ஆரோக்கியமாகவும், தேய்ந்து விடாமலும், உறுதியாகவும் இருக்கும்.
நம்முடைய மூட்டுகள் உறுதியாகவும் , நெகிழ்வுடனும் நீண்ட காலம் இருக்க அவற்றிற்கு தேவையான அளவு ஈரப்பதம் தேவைப்படுவதால், நாம் சரியான அளவில் தண்ணீர் குடித்து வருவது அவசியமாகும்.
எனவே உடலுக்கு தேவையான தண்ணீரை தினமும் குடித்து வாருங்கள் .

No comments:

Powered by Blogger.