Breaking

பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள்:

                                                                               


பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள்:

அமெரிக்காவில் உள்ள ஆர்ப்மீடியா என்ற பத்திரிகையாளர் அமைப்பு நியூயார்க் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகளை பற்றி ஆய்வு செய்துள்ளது. நியூயார்க் பல்கலைக்கழக மைக்ரோ பிளாஸ்டிக் ஆய்வு பேராசிரியர் ஷெர்ரிமேசன் தலைமையிலான குழு இந்த ஆய்வை மேற்கொண்டது.
இதில் உள்ள 11 முன்னணி நிறுவனங்களின், 250 குடிநீர் பாட்டில்களை எடுத்து ஆய்வு மேற்கொண்டனர். இந்தியாவில் இருந்த பிஸ்லரி குடிநீர் பாட்டிலும் சோதனைக்கு எடுத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த பிளாஸ்திக் பாட்டிலில் பாலிபுரோப்லின், நைலான், பாலித்தீன், டெரபதலேட் போன்ற கண்ணுக்கு தெரியாத துகள்கள் இருந்தாதாக தெரிய வந்துள்ளது.
இந்த வகையான தண்ணீர் பாட்டிலில் நாம் தண்ணீர் குடிப்பதால் பிளாஸ்டிக் துகள்கள் குடல்வழியாக ரத்த குழாய்க்குள் சென்று, எல்லா உறுப்புகளிலும் தேங்கி நிற்கிறது. இதில் தண்ணீர் குடிப்பதால் ஈரல், சிறுநீரகம் போன்ற உறுப்புகள் பாதிக்கப்பட்டு உடலில் பல அப்பாயாகரமான விளைவுகளை ஏற்படுத்தும்.
சுகாதாரமற்ற தண்ணீரை குடிப்பதால் ஒரு வருடத்திற்கு ஆயிரக்கணக்கான குழந்தைகள் இறப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. எனவே பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிப்பதை தவிர்த்து விடுங்கள். இவை உடல் உபாதைகளை ஏற்படுத்துவது மட்டுமில்லாமல், தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் நம் உயிரை கொல்லும் அபாயமும் ஏற்படும். எனவே பிளாஸ்டிக்கில் தண்ணீர் குடிப்பதை தவிர்த்து விட்டு காப்பர் போன்ற உடலுக்கு நன்மையை தரும் பாட்டில்களில் தண்ணீர் குடியுங்கள். வீடுகளில் பிளாஸ்டிக் குடங்கலுக்கு பதிலாக மண்பானைகளை உபயோகியுங்கள், ஆரோக்கியமாக வாழுங்கள்.

No comments:

Powered by Blogger.