புதியதாக பள்ளி செல்லும் நம் குழந்தைகளுக்கு நாம் சொல்ல வேண்டிய அறிவுரைகள்
1 உங்கள் மகன் / மகளுக்கு இன்று முதல் புதிய அட்டவணை ஆரம்பிக்கப்படுகிறது என்று கூறுங்கள். தினமும் சில மணிநேரம் பள்ளியில் இருக்க வேண்டும் என்று சொல்லுங்கள் .
2 பிள்ளையுடன் பள்ளிக்கு சென்று, பள்ளியை அவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.
3 பள்ளியில் புதிய நண்பர்களை பெற்று மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று நம்பிக்கையளியுங்கள்.
4 முடிந்தால், உங்கள் குழந்தையை சக வகுப்பு மாணவன் / மாணவியுடன் சந்திக்க வையுங்கள்.
5 உங்கள் குழந்தை இதற்கு முன் பால்வாடி பள்ளியில் படித்திருந்தால், தங்கள் பெற்றோரிடம் இருந்து அதிக நேரம் தள்ளி இருப்பது அவர்களுக்கு கடினமாக இருக்காது.
6 பள்ளியை பற்றி குழந்தையிடம் நேர்மறையான முறையில் எடுத்து கூறுங்கள் – சிந்தித்தல் மற்றும் கற்பித்தல் ஆகியவற்றை பற்றி அவர்களை பழக்கப்படுத்துங்கள், பள்ளியை பற்றி கேள்வி அல்லது சந்தேகங்களை உங்களிடம் கேட்க ஊக்குவியுங்கள்.
7 யாரவது அவர்களின் பெயரை அழைக்கும் போது எவ்வாறு புரிந்து கொள்வது என்று கற்றுக்கொடுங்கள். ஆசிரியரிடமும் மற்ற குழந்தைகளிடமும் எவ்வாறு தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கற்றுகொடுங்கள்.


No comments: