Breaking

இறப்பை புற்று நோய் பற்றியும் அவை எவற்றால் ஏற்படுகிறது என்பது பற்றி அறிவோம்..






இரைப்பை புற்று நோய்

இத்தகைய திறன்மிகுந்த இரைப்பையை பேணி காக்க வேண்டியது அவசியம். அதை சரிவர பேணாத பட்சத்தில் 'கியாஸ் டிரைசிஸ்', 'அல்சர்', இரைப்பை புற்று நோய் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. அவற்றில் இரைப்பை புற்று நோய் முக்கியமானது. இந்த நோயின் தாக்கம் சர்வதேச அளவில அனைத்து நாடுகளிலும் பரவலாக உள்ளது.

காரணம் என்ன?

இரைப்பை புற்று நோயின் தாக்கத்துக்கு மக்களின் வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்க வழக்கங்களே முக்கிய காரணங்களாக விளங்குகிறது. மிசோரம் மாநில மக்களிடம் புகை பழக்கம் அதிகம். அங்கு வாழும் மக்கள் தண்ணீரில் கூட புகையை கலந்து குடிக்கிறார்கள். இது தவிர சமையல் எண்ணையும் முக்கிய காரணியாக உள்ளது.
ஏற்கனவே சமையல் செய்த எண்ணையை மீண்டும் கொதிக்க வைத்து உணவு தயாரித்து அதை சாப்பிடுவதன் மூலம் இரைப்பை புற்று நோய் உண்டாகிறது. இதுவும் இந்நோய் தாக்கத்துக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. உணவில் அதிக அளவு உப்பு சேர்ப்பதும் மிக முக்கிய காரணமாக கூறப்படுகிறது. சராசரியாக ஒருமனிதன் நாள் ஒன்றுக்கு உணவில் 4 முதல் 5 கிராம் வரை மட்டுமே உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். என உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. ஆனால் அளவுக்கு அதிகமாக உப்பு சேர்க்கப்படும் கருவாடு மற்றும் ஊறுகாய் போன்றவற்றை அசைவம் மற்றும் சைவ உணவு பிரியர்கள் தாராளமாக சேர்த்து கொள்கிறார்கள். இதுவும் இரைப்பை புற்று நோய்க்கு ஒரு காரணம்.

இதனுடன் மதுப்பழக்கம் மற்றும் புகையிலை பழக்கம் உள்ளவர்கள் இந் நோயால் பாதிக்கப்படுகின்றனர், இவை அனைத்தையும் தாண்டி இன்றைய கால கட்டத்தில் 'எச்' பைரோரை என்ற நச்சு கிருமி இரைப் பையை தாக்குகிறது. இதுவும் இந்நோய் தாக்க காரணமாகிறது.



தடுக்கும் முறைகள்

இரைப்பை புற்று நோய் வராமல் தடுக்கும் வழி முறைகளும் உள்ளன. நமது அன்றாட உணவில் நார் சத்து மிகுந்த பழங்கள், பச்சை காய்கறிகள் மற்றும் உணவு தானிய வகைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். உணவில் குறைந்த அளவில் ஆடு மற்றும் மாட்டிறைச்சியை எடுத்துக் கொள்ள வேண்டும். மற்ற நாட்களில் சத்துமிகுந்த புரோட்டீன் உள்ள துவரை மற்றும் அவரை பருப்பு வகைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். சமையலுக்கு சுத்தமான எண்ணையை பயன்படுத்த வேண்டும்.

மரபு வழி இரைப்பை புற்று நோய் பாதிக்கும் குடும்பத்தை சேர்ந்தவர்கள் முன்பே பரிசோதனை செய்து கொள்வது நல்லது. நோய் தாக்குதல் தெரிந்தவுடன் ஆபரேசன் (அறுவை சிகிச்சை) மூலம் இரைப்பையை அகற்றி விடலாம். இரைப்பையை எடுத்து விட்டாலும் ஜீரண பிரச்சினை இல்லாமல் உயிர் வாழ முடியும்.
உடலில் அஜீரண கோளாறு, நெஞ்சு எரிச்சல் போன்ற உபாதைகள் இருந்தால் மருந்து கடைகளுக்கு சென்று மருந்து மற்றும் மாத்திரைகளை தாமாகவே வாங்கி சாப்பிடக் கூடாது. சிலர் இணைய தளத்துக்கு சென்று அதில் கூறப்படும் மருத்துவ ஆலோசனைகள் மூலம் மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்ள கூடாது.

அவ்வாறு செய்வதன் மூலம் வேறு சில பக்க விளைவுகள் ஏற்படலாம். என்னைப் பொறுத்தவரை இணையதள மருத்துவ அறிவு மருத்துவர்களுக்கு வரம் ஆகவும், மக்களுக்கு சாபம் ஆகவும் கருதுகிறேன். எனவே இரைப்பை புற்று நோய் அறிகுறி தெரிந்தால் உடனே சம்பந்தப்பட்ட டாக்டரை அணுகி மருத்துவ ஆலோசனை பெற்று பூரண குணமடைலாம்.

No comments:

Powered by Blogger.