Breaking

நேர்மறை எண்ணங்கள் பெருக வீரபத்திராசனம் செய்முறை விளக்கம்..

                            


நேர்மறை எண்ணங்கள் பெருக வீரபத்திராசனம்

செய்முறை

கால்களை ஒன்றாக சேர்த்து வைக்க வேண்டும். பின் இடது காலை முன் நோக்கி சற்று பெரிய அடியாக வைக்க வேண்டும். வலது கால் பின்னால் இருக்க வேண்டும். வலது கால் பாதத்தை 45 டிகிரி கோணத்தில் திருப்ப வேண்டும். மூச்சை மெதுவாக இழுத்தபடி, இடது கால் முட்டியை முன்னோக்கி மடக்கியவாறு இரண்டு கைகளையும் ஒன்றாக சேர்த்தவாறு தலைக்கு மேலே உயர்த்த வேண்டும்.

இடது கால் முழங்கால் மற்றும் கணுக்கால் ஒரு நேர் கோட்டில் இருப்பது அவசியம். முதுகை நன்றாக வளைத்து, தாடையை உயர்த்தி, தலையை மேல் நோக்கி உயர்த்தி கைகளைப் பார்க்க வேண்டும். இடுப்பை மெதுவாக கீழே இறக்க வேண்டும். மெதுவாக பழைய நிலைக்கு திரும்பி, அடுத்ததாக வலது காலை முன்வைத்து ஆசனத்தை தொடரலாம்.


பலன்கள்

இந்த ஆசனம் கீழ் முதுகு, கைகள் மற்றும் கால்களை வலுப்படுத்தும் ஒரு அற்புதமான ஆசனமாகும். நிதானத்தை அதிகரிக்கவும், உடலை உறுதிப்படுத்தவும், மனதை சமன்படுத்தவும் உதவுகிறது. நெஞ்சுப் பகுதி வலுப்பெறுவதால், நுரையீரலுக்கு நல்ல ரத்த ஓட்டத்தைக் கொடுக்கும். இதை செய்வது மூலம் சுவாச சம்பத்தப்பட்ட பிரச்சினைகளை தவிர்க்கலாம். இந்த ஆசனம் தோள்களில் இருக்கும் அழுத்தத்தை குறைக்க உதவும். மொத்தத்தில் இந்த ஆசனம் மனதையும் உடலையும் தளர்த்தி, அமைதி, தைரியம், மற்றும் நேர்மறை எண்ணங்கள் பெருக உதவுகிறது.

No comments:

Powered by Blogger.