நுரையீரல் பிரச்னைகளில் இருந்து நிவாரணம் தரும் ஆசனம் பஸ்திரிகா பிராணயாமம்
பஸ்திரிகா பிராணயாமம்
ஆசனத்தில் அமர்ந்து தலை, கழுத்து, முதுகு போன்றவற்றை நேராக வைத்துக்கொண்டு, கண்களை மூடிக்கொள்ள வேண்டும். கைகளை நேராக வைத்துக்கொண்டு இரு நாசித்துவாரங்களின் வழியாக வேகமாக மூச்சை உள்ளிழுத்து, வேகமாக வெளியே விட வேண்டும். இப்படி ஒருவேளைக்கு 10 முறை செய்ய வேண்டும். இதைச் செய்வதால், நெஞ்சில் கட்டியாக இருக்கும் சளி மூக்கின் வழியாக வெளியேறும். மூக்கு அடைத்துக்கொண்டு சுவாசிக்கச் சிரமப்பட்டு, வாயால் சுவாசிப்பவர்கள் இந்தப் பயிற்சிகளின் மூலம் நல்ல பலன் பெறலாம். இவை நாள்பட்ட நுரையீரல் பிரச்னைகளில் இருந்து நிவாரணம் தரும்.

No comments: