இந்தியாவின் முதல் பெண் மாலுமியாக ரேஷ்மா! தமிழக பெண்ணின் சாதனை!
இந்தியாவின் முதல் பெண் மாலுமியாக ரேஷ்மா! தமிழக பெண்ணின் சாதனை!
பல்வேறு துறைகளில் பெண்கள் ஆண்களுக்கு சரிநிகர் என்று போட்டி போட்டுக் கொண்டு முன்னேறி வந்தாலும், இதுநாள் வரையில் மாலுமியாக நம் நாட்டில் பெண்கள் இருந்ததில்லை. இந்நிலையில், இந்தியாவின் முதல் பெண் மாலுமியாக தமிழகத்தின் ரேஷ்மா சாதனைப் படைத்துள்ளார்.
சென்னையில் பிறந்து, மேற்கு வங்கத்தில் பணிபுரிந்து வரும் ரேஷ்மா, இப்போது உலகம் முழுவதும் வலம் வந்துக் கொண்டிருக்கும் இந்தியாவின் முதல் பெண் கப்பல் பைலட் .
கப்பல் பைலட் வேலைக்கு, விளம்பரம் பார்த்து, முறையான பயிற்சிக்கு விண்ணப்பித்து, ஆறு முழுமையான ஆண்டுகள் பயிற்சி எடுத்து வெற்றிகரமாக கப்பல் பைலட்டாகவும் ஆகிவிட்டார் ரேஷ்மா.
தற்போது கொல்கத்தாவில் உள்ள ஹூக்ளி துறைமுகத்தில் கப்பல் பைலட்டாக பணிபுரிந்து வருகிறார்.
இந்தியாவின் முதல் பெண் கடல் மாலுமி மட்டுமல்லாமல், நதிகளில் கப்பலை இயக்கும் முதல் பெண் மாலுமி என்கிற பெருமையும் ரேஷ்மாவிற்கு சொந்தமாக இருக்கிறது.
இதுவரையில் நாற்பது நாடுகளுக்கு கண்டம் விட்டு கண்டம் தாண்டி கப்பலைச் செலுத்தி வலம் வந்துக் கொண்டிருக்கிறார் ரேஷ்மா.


No comments: