Breaking

துண்டித்த தலையை ஒட்ட வைக்க முடியுமா...

                               


இன்றைய மருத்துவ தொழில்நுட்பம் வளர்ந்த நிலையில் துண்டித்த தலையை ஒட்ட வைக்க முடியுமா என்பது பற்றி பார்ப்போம்

துண்டிக்கப்பட்ட தலையை மீண்டும் உடலுடன் ஒட்ட வைப்பது அல்லது தலைமாற்று அறுவை சிகிச்சை என்பது மருத்துவத்துறையில் சோதனை ரீதியில் மட்டுமே உள்ள ஒரு ஆய்வு நடைமுறையாகும். 

இந்த செயல்முறை 1900 ஆண்டுகளில் முற்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு பல்வேறு கட்டங்களாக பல்வேறு சோதனைக் கூடங்களில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. எனினும் 2020 ஆம் ஆண்டு கணக்குப்படி வெற்றிபெற்று நிலைத்த சோதனை என்று பார்த்தால் சுழியமே.

காரணம் என்னவென்று பார்த்தால் தலைப்பகுதி பல சிக்கலான நரம்பு மண்டலங்களையும் ,உடலுக்கு தேவையான சமிக்கைகளை அனுப்பும் மூளையின் இருப்பிடமாகும் உள்ளது

தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் மற்றும் ஆக்ஸிஜன் ஆகியவை பற்றாக்குறை ஏற்பட்டு விடுகிறது இதன் காரணமாக மூளையின் செயல் திறன் படிப்படியாக மங்கிக் கொண்டே வரும். 

மேலும் துண்டிக்கப்பட்ட நரம்பு மண்டலங்களை ஒன்றிணைப்பது மிகவும் சிக்கலான செயல்முறையாக இருக்கும். இறுதியாக தண்டுவட நரம்பினை மூளையுடன் இணைக்கும் செயல்முறை மிக நுணுக்கமாக கட்டமைக்கப்படுவது. 

இவற்றில் வெற்றி சதவிகிதமும் மிகக்குறைவு. எனவே இவ்வகையான அறுவை சிகிச்சையில் வெற்றி பெற்றாலும் முழு அளவில் ஒரு மனிதன் எழுந்து நடமாட முடியுமா என்பது 100% கேள்விக்குறியாகவே உள்ளது.

No comments:

Powered by Blogger.