Breaking

மொட்டையடிக்கும் இடம் மற்றும் முடி வெட்டும் இடங்களில் இருந்து சேகரிக்கப்படும் முடிகள் எங்கே செல்கின்றன

                           



மொட்டையடிக்கும் இடம் மற்றும் முடி வெட்டும் இடங்களில் இருந்து சேகரிக்கப்படும் முடிகள் எங்கே செல்கின்றன

உலகத்துலயே அதிகம் முடி ஏற்றுமதி பண்ற நாடுகள்ல இந்தியா முதலிடம். சீனா இரண்டாவது இடம்.

இந்திய முடிகளை வாங்க உலக சந்தைல நெறைய போட்டி இருக்கு..

காரணம் திருப்பதி கோவில், அடுத்து பழனி ஏன்னா இங்க தான் சுத்தமான மற்றும் தரமான முடிகள் கிடைக்குமாம்.

சுத்தமான மூடினா நீங்க நினைக்கிற ஷைனிங் ஆனா பலப்பலனு இருக்குற முடி இல்ல.

தலைல ஷாம்பு மத்த கெமிக்கல் கலக்காத இயற்கையானவை பயன்படுத்திய முடிகள்.

வருசத்துக்கு 40மில்லியன் பேர் திருப்பதி போறாங்க அதுல 25% பேரு முடியை காணிக்கையா தராங்க..

2014 நிலவரப்படி திருப்பதி கோவில் முடியை ஏலம் விட்ட தொகை $12மில்லியன் அதாவது இந்திய கணக்குப்படி 86கோடி…

இப்ப 2020.. நீங்களே கணக்கு போட்டுக்கங்க எவ்வளவு கோடி வரும்னு. 200கோடியை தாண்டிரிச்சி.

இப்போதைக்கு தரம் பிரித்த ஒரு கிலோ முடி 50000 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இதுல நீளம் அதிகமா இருந்தா ரொம்ப காஸ்ட்லீ

அதனால பெண்கள் தலைமுடிக்கு மவுசு அதிகம்.

பெண்கள்,ஆண்கள் தலைமுடி விக்கு செய்ய யூஸ் பண்றங்க..

விக்குல ரெண்டு வகை..
ஒன்னு உண்மையான முடி, 
இன்னொன்னு சிந்தடிக் முடி - செயற்கை.

வெளிநாட்ல எல்லாரும் விரும்புறது உண்மையான முடில செஞ்ச விக்கு'தான், இந்திய விலைப்படி 30000 இருந்து 75000 வரை விக்கிறாங்க..

12' 14' 16' 18' 20' இந்த சைஸ்ல வெளிவருது அதற்கேற்ற விலையும் கூட..

இதுக்காகவே சந்தைல பெரிய நிறுவனங்கள் இருக்கு அதாவது பிராண்ட்.

அதிகம் விற்பனையாகும் நாடு கனடா மற்றும் மெக்ஸிகோ அதுக்கப்பறம் ஐரோப் நாடுகள்ல, ஆபிரிக்கா நாடுகள்.



முடி திருத்தும் கடைகள் வெட்டுனா முடிய  அந்த ஏரியா ஏஜென்ட்  சேர்த்து கடைசியா தரம் பிரிப்பாங்க.. 
நோய் உள்ள முடி, 
சுத்தமான முடி, 
நீளமான, 
குட்டையான 
அப்புடின்னு.

அப்பறம் ஏற்றுமதி கம்பெனி அதை வாங்கிக் கொள்ளும்..



No comments:

Powered by Blogger.