Breaking

நம்மை சார்ந்து இருப்போருக்கு நாம் இல்லாத நிலையால் இழப்பு ஏற்படாத வண்ணம் பார்த்துக்கொள்வது நமது கடமைகளில் ஒன்றாகிறது

                                          


ஒவ்வொருவரும் இன்றே ஒத்திகை பார்த்துக்
கொள்வோம் 

எதற்கு? 

ஒவ்வொருவரும் மனதை தயார் செய்தே வைத்துக்கொள்வோம் 

அது என்று நம்மை அடையும் தெரியாது 

அது நம்மை வந்தடைவதை தடுக்கவும் யாருமில்லை 

என்னது அது? 

மரணம் தான் 

ஆண்டிக்கும் அரசனுக்கும் இறைவன் எழுதிய சமநீதி 

விண்ணை முட்டும் மாளிகையில் வாழ்பவனும் மண்ணில் சென்று சேருவது காலவிதி 



பலர் மரணத்தை அபசகுணமாக எண்ணுகின்றனர்

ஆனால் மரணமானது இந்த உலகத்தின் அத்தனை அநீதிகளை விட்டும் போதைகளை விட்டும் துயரங்களை விட்டும் மீட்சி தரும் ஒரே மருந்தாகும் 

மனிதனால் விடை கண்டறிய முடியா கேள்விகளுள்
உச்சத்தில் இருப்பது மரணம் தான் 

ஆகவே மரணத்தை எந்நேரமும் எதிர்நோக்கியே நமது வாழ்க்கை இருப்பதால் 

நம்மை சார்ந்து இருப்போருக்கு நாம் இல்லாத நிலையால் இழப்பு ஏற்படாத வண்ணம் பார்த்துக்கொள்வது நமது கடமைகளில் ஒன்றாகிறது 

முக்கியமாக பொருளாதார ரீதியாக குடும்பத்தில் / அலுவலகத்தில் பங்குவகிப்போர் தாங்கள் இல்லாத நிலையிலும் நம்மை நம்பி இருந்தோர் கைசேதம் அடையா நிலையை உருவாக்கி வைக்க வேண்டும் 

No comments:

Powered by Blogger.