Breaking

காலை உணவாக உண்ண ஏற்ற உணவு எது என்று பல நண்பர்கள் என்னிடம் கேட்டதற்கினங்க இந்த பதிவு

                                                                     


        காலை உணவாக உண்ண ஏற்ற உணவு எது என்று பல நண்பர்கள் என்னிடம் கேட்டதற்கினங்க இந்த பதிவு
🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅

இரவு தூங்கும் போது உடல் குளிர்ச்சி அடைகிறது.எப்போது உறுப்புகள் குளிர்ச்சி அடைகிறதோ அங்கு உறுப்புகளின் இயக்கமும் குறைய தொடங்கும்.அந்தி சாய்ந்தாலே ஜீரண சக்தி குறைய ஆரம்பிக்கும்.

இரவு முழுவதும் உடல் குளிர்ச்சி அடைந்து உறுப்புகள் செயல்பாடு குறைவதாலேயே எந்த பசியும் எடுப்பதில்லை தாகமும் எடுப்பதில்லை சிறுநீரும் கழிப்பதில்லை. நீம்மதியான உறக்கம் உறங்க முடிகிறது.

காலை எழுந்தவுடன் உடல் உறுப்புகள் மெதுவாக செயல் பட தொடங்கும்.உஷ்ணமான பித்தம் கொஞ்ச கொஞ்சமாக கிடைக்கப்பெற்ற பின் துரிதமாகும்.

அப்படி இருக்கையில் காலை உணவை நீர்பதத்தில் அருந்த வேண்டும் .இரவு முழுவதும் உறங்கிய உறுப்புகள் அப்போது தான் செயல்பட தொடங்கி இருப்பதால் காலை உணவை நீர்பதத்தில் ஜீரண  மண்டலத்திற்கு கொடுப்பதால் அதன் ஆயுள் அதிகரிக்க படுகிறது.

நீர்பதத்தில் உள்ள பழைய சோறு கடித்துக்கொள்ள விதை நீக்கிய பச்சை குண்டு மிளகாயோ அல்லது சுண்டைக்காயோ உடன் எடுத்துக்கொள்வது சிறந்தது.


ஏன் என்றால் பழைய சோறு குளிர்ச்சியை தரக்கூடியது மற்றும் ஜீரண மண்டலத்தின் உறுப்புக்களை மெது மெதுவாக செயல்படுத்த கூடியது ஜீரணமண்டலத்தின் வேலையை கடினமாகமல் அதே சமயம் உடலுக்கு தேவையான இயக்க சக்தியை கொடுக்ககூடியது. இயக்கத்திற்கு தேவையான நெருப்பு சக்தியான பித்த சக்தியை கொடுப்பது மிளகாய்( நாட்டு குண்டு மிளகாய்), வெங்காயம், சுண்டைக்காய் (கடைகளில் கிடைக்கும் சுனைசுண்டை அல்ல).

பழைய சோறு குளிர்ச்சியானது (வாதம்,கபம் நிறைந்தது) .அந்த குளிர்ச்சியை சமன் படுத்த பித்தம்(நெருப்பு) தேவைப்படும்.உதாரணமாக சுண்டைக்காய். இதன் தன்மை பித்தத்தை அதிகரிக்ககூடியது. குளிர்ச்சியோடு இது சேரும் போது நெருப்பு சமம் அடைகிறது. ஆக பழைய சோறுடன் சாப்பிடும்போது சுண்டையை அப்படியே எடுத்துக்கொள்ளலாம்.ஆனால் பருப்பு கலந்த அரிசிபருப்பு சாதத்துடன் எடுத்துக்கொள்ளும் போது மோரில் ஊர வைத்த சுண்டையைத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏன் என்றால் பருப்பின் தன்மை உடலின் பித்தத்தை சமன் படுத்த கூடிய குணம் கொண்டது. 

ஒரு நாட்டின் தட்பவெப்பத்துக்கு ஏற்ற உணவுதான் அங்கே வாழ்கிற மக்களுக்கான சரியான உணவு. அந்த வகையில் வெப்பம் மிகுந்த நம் நாட்டில் காலை உணவை குளிர்ச்சியாகத் தொடங்குவதே நல்லது. அதற்கு பழைய சாதம் சரியான தேர்வு என்று சொல்லலாம். செரிமான பிரச்னைகள் இருப்பவர்கள் காலையில் முதல் உணவாக பழைய சோற்றினை எடுத்துக்கொள்வது நல்லது. 

குக்கரில் சமைத்த சாதத்தில் இருந்து பழைய சோறு தயார் செய்வதையும், பழைய சோற்றினை ஃபிரிட்ஜில் வைத்தும் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.பழைய சோறு என்பது இயற்கையாய் சமைத்து 12மணி நேரம் ஆகி இருக்க வேண்டும் மற்றும் சமைத்த 15மணி நேரத்திற்குள் சாப்பிட்டு விட வேண்டும்.(15 மணி நேரம் என்பது நீங்கள்  சமைக்கும் பாத்திரம் , சமைக்கும் அரிசி, அன்றைய சீதோஷ்ண நிலை இவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும்.பழைய சாதத்தை தொட்டுப்பார்த்தால் தெரிந்துக்கொள்ளலாம் அது கொட்டுப்போய்விட்டதா இல்லையா என்று..


அது எந்த காலமாக இருந்தாலும் பரவாயில்லை. பழைய சோறு சாப்பிட்டு விட்டு கட்டாயம் வேர்வை வர அளவுக்கு உழைப்பு இருந்தால் எந்த சீதோஷ்ண நிலையானது நம் உடம்பு பாதிப்புக்கு உள்ளாகாது.இயற்கை படைத்த எந்த உணவானாலும் அதில் நஞ்சு சேர்ந்தே இருக்கும் என்பது விதி.அந்த நஞ்சை உடலின் பெரிய உறுப்பான தோல் மூலமே வெளியேற்ற முடியும்.அந்த காலத்தில் பழைய சோறு சாப்பிட்டுவிட்டும் தோட்டத்தில் உழைக்க சென்று விடுவார்கள் என்பதனை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.ஆனால் நகரத்தில் வாழ்ந்துக்கொண்டு பழைய சோறு சாப்பிட்டால் என்ன பயன்..??? 

நம் முன்னோர்கள் குளிர்ச்சி கொடுக்கக்கூடிய மோர் உடன் பச்சை மிளகாய் சீரகம் கொத்தமல்லி ஏன் சேர்த்து அருந்தினார்கள் என்று இப்போது புரிகிறதா..??

குறிப்பு

நஞ்சு உட்கொண்டு சிகிச்சை எடுத்து வீடு திரும்பியோர் பழைய சோறு எடுக்க கூடாது.ஏன் என்றால் பழைய சோறின் உணவுகளிலுள்ள பாஸில்லாய் எனப்படும் பூஞ்சைகள் தாவர மற்றும ரசாய நச்சுக்களின் உயிர்தன்மையை பல நாட்களுக்கு உடலில் அப்படியே வைத்திருக்கும்.

பழைய சோற்றில் எண்ணில் அடங்கா சத்துக்கள் உள்ளது பி6,பி12,சோடியம், பொட்டாசியம், கால்சியம், இரும்பு,நார்ச்சத்து, மக்னீசியம்,சிறு குடலுக்கு நன்மை பயக்கும் லாக்டோபாசில்லஸ் பாக்டீரிய இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்..சரி  ஆங்கில மருந்துவம் நமக்கு புரிந்துவிட கூடாது என்பதற்காக வாயில் நுழையாத பெயர் எல்லாம் வைத்திருக்கிறார்கள்.நமக்கு அது எல்லாம் தேவையே இல்லை.நாம் தான் பழைய சோறு உண்பதன் மூல காரணத்தை தெரிந்துக்கொண்டேமே அல்லவா..அது போதும்..

என்ன நான் சொல்வது சரிதானே????


No comments:

Powered by Blogger.