நம்முடைய குழந்தைகள் ஆரோக்கியமாக வளர,வளர்க்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் அறிவோம்..
6 மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளை தனித் தொட்டிலில் படுக்க வைக்கலாம். அல்லது தனி கட்டிலில் தாயிற்கு அருகே படுக்க வைப்பது பாதுகாப்பானது.
* ஒரு வயது வரை கூட தொட்டிலில் படுக்க வைக்கலாம்.
* குழந்தையின் முதுகு படுக்கையில் இருக்கும்படியாக மல்லாக்கப் படுக்க வைக்க வேண்டும்.
* கட்டிலில் படுக்க வைக்கும்போது, குறைந்த ஆடைகளுடன் கயிறு, நாடா, லேஸ் இதுபோல எதுவும் இல்லாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.
* தலையில் தொப்பி போடாமல் குழந்தையை தூங்க வைக்க வேண்டும். ஏனென்றால் இதெல்லாம் மூச்சடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.
* மது அருந்தியவர்கள், புகை பிடித்தவர்கள் யாராக இருந்தாலும் குழந்தைகள் அருகில் படுக்க கூடாது.
ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் அருகில் தலையணை, கனமான போர்வை, கம்பளி, பெரிய வகையான பஞ்சு பொம்மைகள் ஆகியவற்றை வைத்திருக்கக் கூடாது.
* 1-5 வயது வரை மட்டுமே குழந்தைகளுடன் பெற்றோர் படுக்கையில் ஒன்றாகத் தூங்கலாம்.
* அதற்கு பின் பெண் குழந்தைகளை தாயுடன் உறங்க செய்வது நல்லது. அல்லது அதே அறையில் வேறு இடத்தில் தூங்க வைக்கலாம்.
* ஆண் குழந்தைகளை தந்தையுடன் உறங்க செய்வது நல்லது.

No comments: