ஒரு குழந்தைக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதா? என்பதை கண்டறிய நான்கு வழிமுறைகள் ..
ஒரு குழந்தைக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதா? என்பதை கண்டறிய நான்கு வழிமுறைகள் ..
குழந்தைகளின் உயரத்திற்கு ஏற்ற எடையில்லாமல் இருக்கும் தன்மை, வயதிற்கு ஏற்ற உயரமில்லாமல் இருக்கும் தன்மை, ரத்த சோகை மற்றும் எடை குறைவு. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக பல்வகை ஊட்டச்சத்து திட்டத்தை டி.என்.ஐ.என்.பி. (தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஊட்டசத்து திட்டம்) முதன் முதலில் 1990-களில் தொடங்கிய மாநிலம் தமிழகம் தான். பின்னர் இது மத்திய அரசின் ஐ.சி.டி.எஸ். (ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டம்) திட்டத்துடன் இணைக்கப்பட்டது" என்று சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறையின் செயலாளர் எஸ்.மதுமதி கூறுகிறார்.
திட உணவு பழக்கத்திற்கு மாறத்தேவையான ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளையும் வழங்கினோம். இது சில சமயங்களில் மோடக் (உருண்டை) அல்லது லட்டு வடிவத்தில் அளிக்கப்பட்டது. இதை தாய் மற்றும் சேய் இருவரும் உண்ண முடியும். அருகில் உள்ள அங்கன்வாடிக்கு சென்று தாய்மார்கள் இவற்றை உட்கொள்ள வேண்டும்.
இதன் மூலம் போதுமான அளவுக்கு சத்தான உணவுகளை உட்கொள்வதை உறுதி செய்ய முடியும். குழந்தைகளுக்கு தேவையான உணவுகள் கிடைப்பதை பொது வினியோக திட்டம் உறுதி செய்கிறது. புதிதாக பிறந்த குழந்தைகளுக்காக ஒரு முழுமையான 1000 நாட்கள் ஊட்டசத்து வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்.

No comments: