Breaking

வீடுகளில் புறாக்கள் வந்து குடிகொண்டால் வீட்டிற்கு தரித்திரம் என்று ஏன் வயதானவர்கள் கூறுகிறார்கள்?





வீடுகளில் புறாக்கள் வந்து குடிகொண்டால் வீட்டிற்கு தரித்திரம் என்று ஏன் வயதானவர்கள் கூறுகிறார்கள்?




வீடுகளில் புறாக்கள் வந்து குடிகொண்டால் வீட்டிற்கு தரித்திரம் என்று ஏன் வயதானவர்கள் கூறுகிறார்கள்?

நம் முன்னோர்கள் கொஞ்சம் புத்திசாலிகள். நம்மிடம் நேரடியாக ஒரு புத்திமதியைக் கூறினால் நாம் அதைக் கேட்க மாட்டோம் என்று தெரிந்து மறைமுகமாக பயமுறுத்தும் வகையில் பல விஷயங்களைக் கூறிவிட்டுச் சென்றுள்ளனர். அதில் ஒன்று தான், புறா வளர்த்தால் தரித்திரம் பிடிக்கும் என்று கூறுவதும்.
உண்மையான காரணம் என்னவென்று கேட்டோம் என்றால், இது தான் காரணமாக இருக்குமென்று பலரும் கூறுகின்றனர்- புறாக்கள் எழுப்பும் சத்தமும் அவற்றின் எச்சங்களின் நாற்றமும் பாம்புகளை எளிதில் கவர்ந்து இழுக்கும் என்பதால், புறாக் கூண்டில் பாம்புகள் வந்து தங்கி புறாக்களையும் நம்மையும் தாக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

புறா எழுப்பும் ஒலியே சற்று பேய் அலறுவது போன்ற உறுமல் சத்தமாக தான் இருக்கும். அந்த சத்தமே ஒருவித எதிர்மறை எண்ணத்தை நமக்குள் கொண்டு வரலாம். அதனால் நம் முன்னோர்கள் தரித்திரம் என்று கூறியிருக்கலாம்.
புறாக்களை வளர்க்கவே கூடாது என்றில்லை. தாராளமாக வளர்க்கலாம். ஆனால் வீட்டிலிருந்து சற்று தொலைவில் அதன் கூண்டு இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
புறாக்களின் எச்சங்களை நீக்கி அடிக்கடி மஞ்சள் தண்ணீர் தெளித்து சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு சுத்தமாக வைத்துக்கொண்டால் பாம்புகள் வருவதைக் கட்டுப்படுத்த முடியும்.

புறாக்களை வீட்டில் வளர்ப்பது அதிர்ஷ்டம் என்று கூறி வளர்ப்பவர்களும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
புறா ஓர் அழகானப் பறவை. நான் படத்தில் இணைத்துள்ள மரகதப் புறா தமிழ்நாட்டின் மாநிலப் பறவையும் கூட. அதனால் புறாக்களை தரித்திரமாக எண்ணாமல், நமக்குப் பிடித்தால் வளர்த்துக்கொள்ளலாம். ஆனால் அவை வாழும் இடத்தை சுத்தமாகப் பராமரிப்பது மிக முக்கியம்.

No comments:

Powered by Blogger.