Breaking

வெயில் காலம் வந்தாச்சு...ஒரு டன் ஏசி, இரண்டு டன் ஏசி என்று சொல்கிறார்களே, அந்த 'டன்' என்றால் என்ன?





ஒரு டன் ஏசி, இரண்டு டன் ஏசி என்று சொல்கிறார்களே, அந்த 'டன்' என்றால் என்ன?


ஒரு டன் ஏசி, இரண்டு டன் ஏசி என்று சொல்கிறார்களே, அந்த 'டன்' என்றால் என்ன?


ஏசி வேலை செய்ய எவ்வளவு மின்சாரம் (மின் ஆற்றல்) தேவைப்படும் என்பதை அளக்கும் ஒரு அளவீடு தான் இந்த டன்.

உதாரணத்திற்கு 40 வாட் ட்யூப்லைட் (40w tubelight), 1000 வாட் ஹீட்டர் (1000w heater) என்று சொல்கிறோம் அல்லவா, அந்த வாட் (Watt) போல தான் இந்த டன்னும். வாட், டன், இரண்டும் அந்தந்த சாதனம் இயங்க எத்தனை ஆற்றல் தேவை என்பதை குறிக்கும் அளவுகள் (மீட்டர், அடி, மைல் போல).

சரி, ஏசிக்கும் 'வாட்'டே பயன்படுத்தலாமே, எதற்கு டன் எல்லாம்?

அதற்கு நடைமுறை காரணம் உண்டு. ஒரு டன் என்பது தோராயமாக 3500 வாட். 1.5 டன் என்பது 5250 வாட் தோராயமாக. 3500 வாட் , 5250 வாட் , 7000 வாட் என்று எண்ணுவதைக் காட்டிலும் 1 டன் , 1.5 டன் , 2 டன் என்று எண்ணுவது எளிமை ஆகும்.



சரி இந்த 1 டன் = 3500 வாட் எங்கிருந்து வந்தது?

உதாரணத்திற்கு, நீங்கள் உங்கள் வீடு பிரிட்ஜில் இருந்து ஐஸ் கட்டி ஒன்றை எடுக்கிறீர்கள். நீங்கள் அதை எடுக்கும்போது அது -10°C சூட்டில் (அதாவது குளிரில்) இருக்குறது என்று வைத்துக்கொள்வோம். அதை வெளியே எடுத்து நீங்கள் வைக்கிறீர்கள். காற்றில் உள்ள சூட்டை அந்த ஐஸ் கட்டி கொஞ்ச கொஞ்சமாக இழுத்துக்கொள்ளும். அப்போது அந்த ஐஸ் கட்டியின் சூடு -10°C யில் இருந்து -9°C, -8°C, -7°C, என்று கொஞ்ச கொஞ்சமாக சூடு ஏறி -1°C, 0°C வரை வந்து விடும்.

0°C வரும் வரை அது ஐஸ் கட்டியாகத் தான் இருக்கும். ஆனால் 0°Cக்கு பின் நேராக 1°Cக்கு வராது. இடையே ஒரு முக்கியமான நிகழ்வு ஒன்று நடக்க வேண்டி இருக்குறது. அது ஐஸ் நீராக மாறும் நிகழ்வு ஆகும். ஐஸ் நீராக மாற கொஞ்சம் வெப்பம் தேவை. அதை காற்றில் இருந்து எடுத்துக்கொள்ளும். அந்த வெப்பம் ஐஸ்இல் உள்ள bondகளை உடைத்து அதை நீராக மாற்றும். நீராக மாறியபோதும் சூடு 0°C தான் இருக்கும்.

0°Cஇல் தண்ணீர் ஐஸ் கட்டியாகவும் இருக்கும், திரவமாகவும் இருக்கும். 0°C ஐஸ் காற்றில் உள்ள வெப்பத்தை எடுத்துக்கொண்டு 0°C தண்ணீராக மாறும்.

சரி, அவ்வாறு 0°C ஐஸ், 0°C தண்ணீராக மாற எவ்வளவு வெப்பம் தேவைப்படும்?

இதை ஆராய்ச்சி செய்து ஒரு நாளில் ஒரு கிலோ ஐஸ்க்கு 335000 Joule (ஜுல்) தேவை என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

இது ஒரு கிலோவுக்கு ஒரு டன்னுக்கு எவ்வளவு?

அமெரிக்கக் கணக்கில் ஒரு டன் என்பது 907 கிலோ. (நம்மூரில் 1000கிலோ என்றாலும், டன் என்பது அமெரிக்ககே கணக்கு என்பதால், இங்கே 907 கிலோ என்றே நாம் கொள்ளவேண்டும்.

எனவே ஒரு டன் அளவு 0°C ஐஸ் ஒரு நாளில் , 0°C தண்ணீராக மாற தேவைப்படும் வெப்பம் : 335000∗907335000∗907ஜுல்.

ஒரு நாளுக்கு 335000∗907335000∗907 ஜுல் என்றால் ஒரு நொடிக்கு?

335000∗90724∗60∗60335000∗90724∗60∗60

= 3516.723516.72 (ஜுல், ஒரு நொடிக்கு)

ஒரு நொடிக்கு ஒரு ஜுல் செலவனால் அது ஒரு வாட் எனப்படும்.

எனவே 1 டன் = 3516 வாட். தோராயமாக 3500 என்று சொல்லலாம்.

No comments:

Powered by Blogger.